ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (16) | |
Advertisement
புதுடில்லி: கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி ரூ.1.16 லட்சம் கோடி வசூலானது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் வசூலான தொகையை விட 33 சதவீதம் அதிகம் ஆகும்.இந்த ஆண்டு ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலாக கிடைத்த ரூ.1.16 லட்சம் கோடியில்,சிஜிஎஸ்டி ஆக ரூ. 22,197 கோடியும்எஸ்ஜிஎஸ்டி ஆக ரூ.28,541 கோடியும்ஐஜிஎஸ்டி ஆக ரூ. 57,864 கோடியும் ( இறக்குமதி மூலம் வசூலான ரூ. 27,900 கோடியும் அடக்கம்)செஸ் ஆக Rs 7,790 கோடியும் ( பொருட்கள் இறக்குமதி மூலம்
GST, FINANCE MINISTRY, JULY, ECONOMYY,  REVENUE, ஜிஎஸ்டி, நிதி அமைச்சகம், பொருளாதாரம்,

புதுடில்லி: கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி ரூ.1.16 லட்சம் கோடி வசூலானது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் வசூலான தொகையை விட 33 சதவீதம் அதிகம் ஆகும்.
இந்த ஆண்டு ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலாக கிடைத்த ரூ.1.16 லட்சம் கோடியில்,
சிஜிஎஸ்டி ஆக ரூ. 22,197 கோடியும்
எஸ்ஜிஎஸ்டி ஆக ரூ.28,541 கோடியும்
ஐஜிஎஸ்டி ஆக ரூ. 57,864 கோடியும் ( இறக்குமதி மூலம் வசூலான ரூ. 27,900 கோடியும் அடக்கம்)
செஸ் ஆக Rs 7,790 கோடியும் ( பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ. 815 கோடியும் அடக்கம்) வசூலாகி உள்ளது.


latest tamil newsநிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்த ஆண்டு ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலானது, கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் வசூலான ரூ.87,422 கோடியை விட 33 சதவீதம் அதிகம் ஆகும். தொடர்ச்சியாக 8 மாதங்கள் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. ஆனால் மே மாதம், பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, ஜூன் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் சென்றது.
அப்போது, ரூ.92,849 ஆயிரம் கோடி வசூல் ஆனது. தற்போது, தளர்வுகள் அளிக்கப்பட்டதால், ஜிஎஸ்டி வசூல் மீண்டும் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. இது, இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதை காட்டுகிறது. ஜிஎஸ்டி வசூல், வரும் காலங்களில் அதிகரிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஆக-202117:51:26 IST Report Abuse
Kumar Singapore GST வசூல்னு சொல்லுறத விட கந்து வட்டி வசூலுன்னு சொல்லலாம்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
01-ஆக-202121:09:56 IST Report Abuse
Visu Iyerமக்களை கந்தலாக்கி வியாபாரிகளை வட்டி க்கு வாங்கி என்று கவிதையே எழுதலாம் போல இருக்குதே....
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
01-ஆக-202117:38:45 IST Report Abuse
Rajas //////இது, இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதை காட்டுகிறது/////// பொருட்களின் அடிப்படை விலை ஏறி விட்டது. 6 மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ கடலை எண்னை 120 க்கு விற்றது. இப்போது அதே எண்னை விலை 180 . அப்படியானால் GST 50% அதிகமாக வருமானமாக வருகிறது. வண்டிகளின் பாகங்கள் விலை 40-50% அதிகரித்து விட்டது. 400 ரூபாய்க்கு விற்ற வாகன உதிரி பாகங்கள் இப்பொது ரூபாய் 600 அதில் அப்போது GST 112 இப்போது GST 168
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
01-ஆக-202121:10:50 IST Report Abuse
Visu Iyerஇன்னும் விலை கூடும்.. வரி வசூல் கூடும் .. ஆனால் அந்த பணத்தை என்ன அல்லது எப்படி செலவு செய்கிறார்கள் என்று மட்டும் சொல்லவே மாட்டேன் என்கிறார்களே.. ஏன்.?...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-ஆக-202117:29:57 IST Report Abuse
Kasimani Baskaran எதிரிக்கோஷ்டிகள் அங்கலாய்த்தது போல பொருளாதாரம் ஒன்றும் படுத்து விடவில்லை. ஜி எஸ் டி க்குள் வராத பொருளாதாரம்தான் நாட்டின் முதுகெலும்பு - அது முழுவதும் சிதைந்து விட்டது என்று கதற ஒரு கோஷ்டி வரும்...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
01-ஆக-202121:11:16 IST Report Abuse
Visu Iyerபொருளாதாரம் தூங்கி கொண்டு இருக்கிறது என்று சொல்றீங்க புரிகிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X