சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளித்தலை அருகே நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்

Added : ஆக 01, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அருகே கீழ ஆரியம் பட்டியில் நோயாளியை ஏற்றிச் செல்லும்போது, 108 ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டது. திருச்சி, கீழ ஆரியம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால்( 45). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் இடையே நில பிரச்னை இருந்தது. இன்று காலை செல்வராஜ் குடும்பத்திற்கும்,
குளித்தலை அருகே நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்

குளித்தலை: குளித்தலை அருகே கீழ ஆரியம் பட்டியில் நோயாளியை ஏற்றிச் செல்லும்போது, 108 ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டது.

திருச்சி, கீழ ஆரியம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால்( 45). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் இடையே நில பிரச்னை இருந்தது. இன்று காலை செல்வராஜ் குடும்பத்திற்கும், கோபால் குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியது. இதில், செல்வராஜ், இரும்பு ஆயுதங்களால் தாக்கினார். அதில், கோபால், அவரது மனைவி கிருஷ்ணவேணி காயமடைந்தனர். தொடர்ந்து, இருவரும், மகன் யுவராஜூடன் 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு சென்றனர். வழியில், அதே ஊரை சேர்ந்த செல்வராஜின் உறவினர்கள், ஆம்புலன்சை மறித்து தாக்கினர். அதில், ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைந்தது. ஊழியர்கள், காயமடைந்தவர்களை பத்திரமாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், பெட்டவாய்த்தலை போலீசில் புகார் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X