அண்ணாமலையார் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ கொடியேற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாமலையார் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ கொடியேற்றம்

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021
Share
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் ஆலயம் பிரம்மோற்சவ கொடியேற்ற உற்சவம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டது .அதனைத் தொடர்ந்து உண்ணாமுலை அம்மன் சன்னதி பின்புறம் உள்ள உற்சவ மூர்த்தியான பராசக்தி அம்மனுக்கு விசேஷ
அண்ணாமலையார் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ  கொடியேற்றம்

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் ஆலயம் பிரம்மோற்சவ கொடியேற்ற உற்சவம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டது .


latest tamil news


அதனைத் தொடர்ந்து உண்ணாமுலை அம்மன் சன்னதி பின்புறம் உள்ள உற்சவ மூர்த்தியான பராசக்தி அம்மனுக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்கள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்பு உற்சவ மூர்த்தியான விநாயகர், பராசக்தி அம்மன் தங்க கொடி மரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார் .


latest tamil newsஅதனை தொடர்ந்து அம்மன் சன்னதி எதிரே உள்ள 52 அடி உயர தங்க கொடி மரத்தில் காலை சரியாக 6.32 மணி அளவில் கிருத்திகை நட்சத்திரம் கடக லக்கனத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார் அவர்களால் துவஜாரோகணம் என்று அழைக்கப்படுகின்ற கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. ஆண்டு முழுவதும் அண்ணாமலையார் ஆலயத்தில் நான்கு முறை கொடி ஏற்றப்படுவது வழக்கம் மூன்று முறை அண்ணாமலையாருக்கும், ஒரு முறை பராசக்தி அம்மனுக்கும் கொடியேற்ற நிகழ்வு நடைபெறும் .

இந்த ஆடிப் பூர பிரம்மோற்சவம் தொடர்ந்து பத்து நாட்கள் காலை, மாலை இருவேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் நான்கு மாட வீதி உலா வருவது வழக்கம் தற்போது கொரோனா தொற்று காரணமாக அண்ணாமலையார் ஆலயத்தில் ஐந்தாம் பிரகாரத்தில் மட்டுமே பக்தர்கள் இன்று வலம் வரும். கடைசி உற்சவமான பத்தாம் நாளன்று பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு மற்றும் நள்ளிரவு வேளையில் உலகத்தில் வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாத ஒரு நிகழ்வு அண்ணாமலையார் ஆலயத்தில் பராசக்தி தீ மிதி திருவிழா நடைபெறுவது உலகப்பிரசித்தி பெற்றதாகும் அன்று இரவு உற்சவ மூர்த்தியான அம்பாளுக்கு நைவேத்தியமாக மூலிகை மருந்து நெய்வேத்தியம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X