ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 31 டன் ரேசன் அரிசி பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 31 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Added : ஆக 01, 2021
Share
வேலூர்: காட்பாடியில், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 31 டன் அரிசி பிடித்தனர்.வேலூர் மாவட்டம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.அதில் 31 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில், வேலூரில் இருந்து ஆந்திரா
காட்பாடி, ஆந்திரா, ரேசன் அரிசி, பறிமுதல்,

வேலூர்: காட்பாடியில், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 31 டன் அரிசி பிடித்தனர்.வேலூர் மாவட்டம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.அதில் 31 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில், வேலூரில் இருந்து ஆந்திரா மாநிலம் சித்தூர் கடத்த முயன்றது தெரிய வந்தது. லாரியுடன் சேர்த்து அரிசியை பறிமுதல் செய்த போலீசார், வேலூரை சேர்ந்த வாரி டிரைவர் மணியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X