ரூ.91.81 லட்சம் மோசடி: மூன்று பேர் தலைமறைவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.91.81 லட்சம் மோசடி: மூன்று பேர் தலைமறைவு

Added : ஆக 01, 2021
Share
ஈரோடு: ஈரோடு, கொல்லம்பாளையம், கார்மல் பள்ளி அருகே வசிப்பவர் மணி. மொடக்குறிச்சி, கணபதிபாளையம், கொடை ஊஞ்சல்காட்டை சேர்ந்தவர் வீராச்சாமி, 40; இவரின் மகன் சாமிதுரை. இவர்கள் கே.வி.எம்., ஆண்டவர் பவுல்ட்ரி பார்ம்ஸ் பெயரில், 29 முதலீட்டாளர்களிடம், 91.81 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையை, 2012ல் பெற்று திருப்பி கொடுக்காமல் இருந்தனர். இது தொடர்பாக, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில்

ஈரோடு: ஈரோடு, கொல்லம்பாளையம், கார்மல் பள்ளி அருகே வசிப்பவர் மணி. மொடக்குறிச்சி, கணபதிபாளையம், கொடை ஊஞ்சல்காட்டை சேர்ந்தவர் வீராச்சாமி, 40; இவரின் மகன் சாமிதுரை. இவர்கள் கே.வி.எம்., ஆண்டவர் பவுல்ட்ரி பார்ம்ஸ் பெயரில், 29 முதலீட்டாளர்களிடம், 91.81 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையை, 2012ல் பெற்று திருப்பி கொடுக்காமல் இருந்தனர். இது தொடர்பாக, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் மூவரும் தலைமறைவாகினர். கடந்த, 2015 ஆக.,ல் பிடிவாரன்ட் பிறப்பித்து, வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கோவை டான்பிட் நீதிமன்றம், கடந்த, 15ல் மூவரையும் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக அறிவித்தது. இவர்கள் குறித்து, 04242256700, 94981-78566 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X