பென்னிகுயிக் வாழ்ந்த இடத்தை இடித்து நூலகமா?; அதிமுக கண்டனம்

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (24) | |
Advertisement
சென்னை: மதுரையில் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் அமைக்கப்படுவதாக செய்திகள் வருவதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக்
பென்னிகுயிக், நினைவு இல்லம், கலைஞர் நூலகம், அதிமுக, கண்டனம், திமுக

சென்னை: மதுரையில் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் அமைக்கப்படுவதாக செய்திகள் வருவதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:


தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அகற்றி அதனை கலைஞர் நூலகமாக மாற்ற திமுக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களையும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்த வேண்டியதும், அவர்களது பெருமைகளை எதிர்கால தலைமுறையினர் அறிந்து பின்பற்றும் வகையில் நினைவுச் சின்னங்களை எழுப்பி மரியாதை செய்ய வேண்டியதும், அவர்கள் வாழ்ந்த இல்லங்களை பேணிப் பாதுகாப்பதும் ஒரு நல்லரசின் கடமையாகும்.

அந்த வகையில், பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தையும் செலவு செய்து முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கி, தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்த பென்னிகுயிக் நினைவு இல்லம் தமிழக அரசால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில், நூறாண்டிற்கும் மேற்பட்ட அந்த நினைவு இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் அமைக்க திமுக அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், இதனை உறுதிப்படுத்தும் வண்ணம், ‛மதுரையில் அந்த பொதுப்பணித்துறை கட்டடத்தில் ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுயிக் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை,' என மாவட்ட கலெக்டர் அறிவித்து இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஒரு வரலாற்றை அழித்து இன்னொரு வரலாற்றை உருவாக்க நினைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.


latest tamil news


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் வாழ்ந்த இல்லம் நூறாண்டு கடந்து அரசால் பராமரிக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் அவர் இந்த நாட்டிற்கு செய்த நன்மைகளை, தியாகங்களை, தொண்டுகளை எதிர்காலத் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். இதனை அழித்துவிட்டால், அப்பகுதி மக்கள் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகும்.

தமிழக அரசின் இம்முடிவு, சரித்திரதத்தை சிதைப்பதற்கு சமம் என்பதை சுட்டிக்காட்டி, அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், யாருக்கும் ஆட்சேபனை இல்லாத இடத்தில் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். தென் தமிழக மக்களின் எதிர்ப்பை மீறி அந்த இல்லத்தில் கலைஞர் நூலகம் அமைக்கப்படுமானால், விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக போராட்டத்தில் குதிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
02-ஆக-202110:51:24 IST Report Abuse
rajan கிறிஸ்தவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு விழாது
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
02-ஆக-202107:15:31 IST Report Abuse
J. G. Muthuraj 1876-1877 ஆண்டுகளில் தமிழகத்தின் தென் பகுதிகளில் மிக கொடிய பஞ்சம் ஏற்பட்டு கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் மக்கள் இறந்தனர். இந்த வறண்ட பகுதியில் உள்ள நிலங்களுக்கு நீர் கொண்டு வந்தால், மக்கள் சாக மாட்டார்கள் என்று  நினைத்து புதிய திட்டத்தை வகுத்தார்.....முல்லை பெரியாறு நதி வெள்ளத்தின் உச்சக்கட்டத்தில் நயகரா வீழ்ச்சியின் பாதி வலிமை இருக்குமாம். இதில் பெருக்கெடுத்து ஓடும் நீரினை கடலில் கலக்க விடாமல் மேற்கு தொடர்ச்சி மலை பாறைகளை  குடைந்து  ஒரு மைல் நீளத்திற்கு சுரங்க பாதையை ஏற்படுத்தி மதுரை, தேனி, கம்பம் பகுதிகளுக்கு கொண்டு வந்தால் ஒன்னரை லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். இதுதான் பென்னி குவிக்கின் கனவு. இந்த யோசனை முன்னமே ராமநாதபுரம் ராஜா உட்பட சிலருக்கு வந்தது...இது முடியாத காரியம் என்று கைவிட்டார்கள். .1807 இல் பணிபுரிந்த மதுரை கலெக்டர் 'இதெல்லாம் இயற்கைக்கு விரோதமான செயல் . எவன் கொடிய மிருகங்கள், விஷப்பூச்சிகள் நிறைந்த காட்டில் அணை கட்ட முடியும் என்று ஏளனமாக கூறினார்.  பல ஆண்டுகள் கழித்து இந்த அபாயகரமான சவாலை ஏற்றார் பென்னிகுவிக் என்ற  கட்டுமான துறையின் விஞ்ஞானி. மனிதன் வாழ முடியாத திருவிதாங்கூரை சேர்ந்த காட்டுப்பகுதியில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வைத்து பணியை ஆரம்பித்தார். காலரா என்ற கொடிய நோய் வந்தது....அதில் அநேக தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உதவி செய்த பல பிரிட்டனை சேர்ந்த ஜூனியர் என்ஜினீயர்கள் மாண்டனர். அவர்கள் கல்லறைகள் இன்றும் அணைக்கு அருகில் இருக்கிறது. கஷ்டப்பட்டு போட்ட முதல் பவுண்டேஷன் மழையில் அடித்துச் செல்லப்பட்டது....மனம் உருகினார் பென்னிகுவிக்...பல தியாகங்கள், இன்னல்களுக்கிடையே திட்டம்  1890 இல் நிறைவேறி 1895 ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.....கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான நாள். வனாந்திர பூமியை செழிப்பாக்கிய இந்த வரலாற்றை அரசியல் காரணங்களுக்காக அழிக்க நினைக்க வேண்டாம்....   
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
02-ஆக-202104:46:46 IST Report Abuse
Nepolian S இடிக்கல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X