பெகாசஸ் விவகாரத்தில் சிறப்பு விசாரணை: 5-ம் தேதி விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், அரசு அதிகாரிகளை பெகாசஸ் உளவு மென்பொருளை கொண்டு அரசு உளவுப் பார்த்ததாக கூறப்படும் விவகாரத்தில் சிறப்பு விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை வரும் வியாழனன்று (ஆகஸ்ட் 5) சுப்ரீம் கோர்ட் விசாரிக்க உள்ளது.மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சசிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., ஜான் பிரிட்டாஸ் மற்றும்
பெகாசஸ், சிறப்பு விசாரணை, Court,Supreme Court, கோர்ட், சுப்ரீம் கோர்ட், நீதிமன்றம்

புதுடில்லி: எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், அரசு அதிகாரிகளை பெகாசஸ் உளவு மென்பொருளை கொண்டு அரசு உளவுப் பார்த்ததாக கூறப்படும் விவகாரத்தில் சிறப்பு விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை வரும் வியாழனன்று (ஆகஸ்ட் 5) சுப்ரீம் கோர்ட் விசாரிக்க உள்ளது.

மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சசிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., ஜான் பிரிட்டாஸ் மற்றும் வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளனர். பெகாசஸ் உளவு மென்பொருளுக்கு அரசு உரிமம் பெற்றதா, உளவு பார்ப்பதற்காக அதனை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்தியதா என்பதை தெரிவிக்க அரசுக்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளனர். மேலும் மனுவில், இந்த உளவு மென்பொருள் அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறது. உலகளாவிய ஊடகங்கள் தங்கள் விசாரணையில், இந்தியாவில் பெகாசஸ் பயன்படுத்தி 142-க்கும் மேற்பட்ட நபர்கள் கண்காணிக்கப்பட்டதாக கூறியதை சுட்டிக்காட்டியுள்ளனர்.


latest tamil news


இவ்விவகாரம் மழைக்கால கூட்டத்தொடரிலும் எழுப்பப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் சுதந்திரமான விசாரணை தேவை என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதனை நிராகரித்த மத்திய அரசு, அதிகாரப்பூர்வமற்ற எந்த ஒரு கண்காணிப்பும் அதன் நிறுவனங்களால் நடத்தப்படவில்லை என்றது. குறிப்பிட்ட நபர்கள் மீதான அரசாங்க கண்காணிப்பு என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றது.

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் மற்றும் சிலர் தொடர்ந்த வழக்கை வரும் வியாழனன்று (ஆகஸ்ட் 5) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
02-ஆக-202106:14:58 IST Report Abuse
 Muruga Vel நாட்டு நலம் கருதி அரசாங்கம் யார் மீது சந்தேகம் இருக்கோ அவர்களை உளவு பார்ப்பதில் என்ன தவறு ..
Rate this:
Cancel
01-ஆக-202121:20:44 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் என்ன செய்ய KOKAAI மாறி RS MP சீட்டுக்கு ஆசைப்படாத JUDGE கிட்ட வரணும் , அந்த judge பேசியதை இன்ரெம் மோடி SNOOPING செய்து கொண்டு தான இருக்கபோகிறார்
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
01-ஆக-202119:00:24 IST Report Abuse
GMM உளவு மென்பொருளை பயன் படுத்த அரசு உரிமை விவரம். இதனை RTI சட்டம் மூலம் கேட்டால் பதில் கிடைக்காதா? மற்றவழிகள் மூலம் உறுதி செய்ய முடியாதா? உச்ச நீதிமன்றத்தை அணுகிதான் அறிய வேண்டுமா? உரிமம் சட்ட ரீதியாக இருந்தால் மனுதாரர்கள் பொது நல வழக்குகளில் இருந்து நீதிமன்றம் தடை செய்ய அனுமதிப்பார்களா? கொடுக்கும் தண்டனையை ஏற்று கொள்வார்களா? தனி நபர் தன் குறைக்கு தீர்வு கேட்கலாம். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், மக்கள் சார்பாக வழக்கு. இஸ்ரேல் ஒரு நம்பிக்கை யான நாடு. பாகிஸ்தான், சீனா போன்று சந்தர்ப்ப வாதம் செய்யாது. உள்நாட்டு தீவிர வாதம் தலைவிரித்து ஆடுகிறது. மனுதாரர்கள் ஆளும் அரசை முடக்க எண்ணம்? ஆனால் முடங்க போவது கருத்து சுதந்திரம், அரசு நிர்வாகம் மற்றும் நீதிமன்றம். சட்டத்தை புரிந்து கொள்ள முடியவில்லை..
Rate this:
MANI DELHI - Delhi,இந்தியா
02-ஆக-202110:13:11 IST Report Abuse
MANI DELHIநம் உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கு வேலை எதுவும் இல்லை என்பதால் தான்... உண்டவீட்டிற்கு துரோகம் செய்யும் மக்கள் இந்த நாட்டில் இருந்து என்ன பயன். நீதிமன்றங்களும் நம்பகத்தன்மை இழந்து உள்ளது தான் உச்சக்கட்டம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X