ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஐக்கிய நாடுகள்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ஆகஸ்ட் மாதத்திற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று கொண்டது.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அல்லாத ஒவ்வொரு நாடும், மாதம் ஒரு முறை கவுன்சிலுக்கான தலைமை பொறுப்பேற்று வருகின்றன. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அல்லாத நாடாக 2 ஆண்டுகளுக்கு இந்தியா, கடந்த ஜனவரி முதல் இருந்து வருகிறது.இந்நிலையில்,
India, UN, Security Council, Presidency, August, U.N,United Nations,இந்தியா,ஐ.நா,ஐக்கிய நாடுகள் அவை

ஐக்கிய நாடுகள்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ஆகஸ்ட் மாதத்திற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று கொண்டது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அல்லாத ஒவ்வொரு நாடும், மாதம் ஒரு முறை கவுன்சிலுக்கான தலைமை பொறுப்பேற்று வருகின்றன. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அல்லாத நாடாக 2 ஆண்டுகளுக்கு இந்தியா, கடந்த ஜனவரி முதல் இருந்து வருகிறது.

இந்நிலையில், ஆக.,2ம் தேதி முதல், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று கொண்டது. இந்த பொறுப்புக்கு இந்தியா 9வது முறையாக வந்துள்ளது. இதற்கு முன்னர், 1950 ஜூன், 1967 செப்., 1972 டிசம்பர், 1977 அக்டோபர், 1985 பிப்ரவரி, 1991 அக்டோபர், 1992 டிசம்பர், 2011 ஆகஸ்ட் மற்றும் 2012 நவம்பர் மாதங்களில் இந்தியா தலைமை பதவியை ஏற்றது.


latest tamil news


இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: ஆக., மாதத்திற்கான தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட நாம், மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவதில் ஆர்வமாக உள்ளோம். எப்போதும், மிதவாதிகளின் குரலாகவும், சர்வதேச சடடங்களின் ஆதரவாளராகவும், பேச்சுவார்த்தையை ஆதரிக்கும் நாடாகவும் இருக்கும் என தெரிவித்து உள்ளார்.பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து இந்தியாவிற்கான நிரந்தர தூதர் டிஎஸ் திருமூர்த்தி பேசியதாவது: ஆக., மாதத்தில் தலைவர் பதவியில் இருக்கும் காலத்தில் 3 உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும். கடலோர பாதுகாப்பு, அமைதி நடவடிக்கை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சர்வதேச அமைதியை வலுப்படுத்துவதற்கு பங்களிப்பு அளிக்கும் வகையில், தலைமை பதவியில் இந்தியா செயல்படும் என தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
01-ஆக-202122:58:00 IST Report Abuse
Mohan 2012 நவம்பர் மாதம் வரை 9முறை ,இது 10 வது முறையல்லவா வருகிறது.
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
01-ஆக-202119:18:13 IST Report Abuse
Palanisamy Sekar மோடிஜியின் வெற்றிக்கு வெளியுறவுத்துறை ஜெய்சங்கரின் பங்கு மகத்தானது. அருமையான திறமையான மனிதர் ஜெய்சங்கர். இது நாட்டுக்கே பெருமைவாய்ந்தது. காங்கிரசால் இழந்த பெருமையெல்லாம் மோடிஜியால் மீண்டுவருகின்ற்து. நல்ல செய்தி உலகத்திற்கும்
Rate this:
sivan - seyyur,இந்தியா
02-ஆக-202107:48:55 IST Report Abuse
sivan தமிழரான ஜெயஷங்கரின் அருமை இந்த திராவிட கும்பலுக்கு தெரியாமல் போனது வருத்தத்துக்கு உரியது....
Rate this:
Cancel
01-ஆக-202118:10:35 IST Report Abuse
thulasiraman h வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X