உ.பி., தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றிப் பெறும்: அமித்ஷா

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
லக்னோ: அடுத்தாண்டு நடக்கவுள்ள உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றிப் பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக இப்போது இருந்தே அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுவதால்
UP, Amitshah, BJP, Massive Majority, உபி, உத்தரப்பிரதேசம், அமித்ஷா, பாஜக, வெற்றி

லக்னோ: அடுத்தாண்டு நடக்கவுள்ள உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றிப் பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக இப்போது இருந்தே அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் உ.பி., பொதுத்தேர்தல் அனைவரின் கவனத்தையும் பெறுகிறது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 325 இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதில், பா.ஜ., மட்டும் தனித்து 312 இடங்களில் வெற்றி பெற்று, முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.


latest tamil news


இதனிடையே, லக்னோவில் அமைக்கப்படவுள்ள மாநில தடயவியல் நிறுவனத்தின் பூமி பூஜை விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரப் பிரதேச மாநிலம் வளர்ச்சிப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. கோவிட் பரவல் காலத்தில் யோகி அரசு, சிறப்பாக செயல்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியில் அமரும். எதிர்க்கட்சிகள் மீண்டும் தோல்வியை சந்திக்க தயாராகுங்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தியதுடன், முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். ஊழலை ஒழித்துள்ளார். கோவிட் காலத்தில், யோகியும் அவரது அமைச்சர்களும் சிறப்பான பணிகளை செய்துள்ளனர்.

தேர்தல் நெருங்கி வருவதால், தான் எதிர்க்கட்சி தலைவர்கள் வெளியே வருகின்றனர். அவர்களின் தவறான வழிநடத்துவதை மக்கள் ஏற்கக்கூடாது. அவர்களது ஆட்சியில், நில மாபியாக்கள் இருந்தனர், வன்முறை ஏற்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தது. குறிப்பிட்ட குடும்பம் மற்றும் ஜாதிக்காக பா.ஜ., உழைக்கவில்லை. ஏழைகளுக்காக உழைத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
02-ஆக-202110:15:12 IST Report Abuse
Kalyan Singapore இவன் சும்மா இருந்தாலே நல்லது. இதே போலத்தான் மேற்கு வங்கத்திலும் ஜெயிக்கும் அன்று சொன்னான். என்ன ஆயிற்று? யோகியை தனியா விட்டாலே போதும் அவர் பார்த்துக்கொள்வார் .
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
02-ஆக-202107:46:05 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இப்படித்தான், மேற்கு வங்காளத்திலும் சொன்னார்கள். தமிழக மக்களை ஏமாற்றுவது சுலபம். தமிழகத்தில் அரசியல் அறிவு குறைந்துவிட்டது.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
01-ஆக-202123:10:18 IST Report Abuse
Rajas அப்படியானால் தேர்தல் நெருக்கத்தில் பெட்ரோல் டீசல் விலைகள் குறையும். தேர்தல் வரும்போது மட்டுமே விலை குறைவதால் தேவைப்படுபவர்கள் அடுத்த எதாவது ஒரு மாநில தேர்தல் வரும் வரை தேவைப்படும் பெட்ரோலை பெரிய பாத்திரத்தில் பிடித்து வைத்து கொள்ளவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X