வெண்கலம் வென்று சிந்து வரலாறு: ஒலிம்பிக் பாட்மின்டனில் அசத்தல்

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று அசத்தினார் சிந்து. ஜப்பானின் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சிந்து, சீனாவின் ஜியாவோ பிங்கை எதிர்கொண்டார். முதல் செட் துவக்கத்தில் 4-0 என முந்திய சிந்து, பின் 11-8 என முன்னேறினார். தொடர்ந்து அடுத்தடுத்து புள்ளிகளை குவித்த சிந்துவை
Olympics, IND, Badminton, PVSindhu, Bronze, Bronze Medal, ஒலிம்பிக், பாட்மின்டன், இந்தியா, சிந்து, வெண்கலம்

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று அசத்தினார் சிந்து.

ஜப்பானின் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சிந்து, சீனாவின் ஜியாவோ பிங்கை எதிர்கொண்டார். முதல் செட் துவக்கத்தில் 4-0 என முந்திய சிந்து, பின் 11-8 என முன்னேறினார். தொடர்ந்து அடுத்தடுத்து புள்ளிகளை குவித்த சிந்துவை தடுக்க தடுமாறினார் ஜியோவோ. வாய்ப்பை பயன்படுத்திய சிந்து, முதல் செட்டை 21-13 என கைப்பற்றினார். இரண்டாவது செட் துவக்கத்தில் ஆதிக்கம் (5-2) செலுத்திய சிந்து பின் 11-8 என முந்தினார். துரத்திய சீன வீராங்கனை ஜியாவோ தொடர்ந்து 3 புள்ளிகள் பெற, ஸ்கோர் 11-11 என சமநிலையை எட்டியது.


latest tamil news




சூழ்நிலைக்கு ஏற்ப சுதாரித்துக் கொண்ட சிந்து 18-14 என வெற்றியை நெருங்கினார். கடைசியில் சூப்பர் 'ஸ்மாஷ்' அடித்த சிந்து வெண்கலப்பத்திற்கான புள்ளியை பெற்றார். 53 நிமிட போராட்டத்தின் முடிவில் சிந்து 21-13, 21-15 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப்பதக்கம் தட்டிச் சென்றார்.


முதல் வீராங்கனை


ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என புதிய வரலாறு படைத்தார் சிந்து. கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இவர், இம்முறை டோக்கியோவில் வெண்கலம் கைப்பற்றினார்.

* இதற்கு முன் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார், வெண்கலம் (2008, பீஜிங்), வெள்ளி (2012, லண்டன்) என இரண்டு பதக்கங்கள் வென்றார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
02-ஆக-202108:35:16 IST Report Abuse
Sampath Kumar வாழ்த்துக்கள் சிந்து
Rate this:
Cancel
சோலைபட்டி பார்த்திபன் இந்தியாவின் மகளுக்கு வாழ்த்துக்கள்..... வெற்றிகள் உன்னை தழவ வாழ்த்துக்கள் மகளே.......
Rate this:
Cancel
KANTHI - Chennai,குவைத்
01-ஆக-202122:16:41 IST Report Abuse
KANTHI நாட்டிற்கு பெருமை சேர்த்தமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X