பிரான்ஸில் பொது இடங்களில் செல்ல கட்டுப்பாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்

Added : ஆக 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் அதிக கூட்டம் கூடும் பொது இடங்களில் நுழைவதற்கு 'ஹெல்த் பாஸ்' கட்டாயம் என அந்நாடு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு எதிராக தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சுதந்திரம் வேண்டும் என கோஷம் எழுப்பினர்.டெல்டா வகை கோவிட் வைரஸ் பரவலை தடுக்க பிரான்ஸ் அரசு 'ஹெல்த் பாஸ்' என்ற திட்டத்தை
பிரான்ஸ், கட்டுப்பாடு, மக்கள், போராட்டம், மக்கள்

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் அதிக கூட்டம் கூடும் பொது இடங்களில் நுழைவதற்கு 'ஹெல்த் பாஸ்' கட்டாயம் என அந்நாடு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு எதிராக தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சுதந்திரம் வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

டெல்டா வகை கோவிட் வைரஸ் பரவலை தடுக்க பிரான்ஸ் அரசு 'ஹெல்த் பாஸ்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி சினிமா தியேட்டர்கள், சுற்றுலாத்தலங்கள், நீச்சல் குளங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றுக்கு வருவோர் சமீபத்திய பரிசோதனையில் கோவிட் நெகடிவ் என வந்ததற்கான சான்று அல்லது கோவிட் தடுப்பூசி போட்டதற்கான சான்றை காட்ட வேண்டும். அதனை சமர்பிக்காவிட்டால் அனுமதி கிடையாது. தற்போது அங்கு கோடை விடுமுறை என்பதால் மக்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


இதனால் தலைநகர் பாரீஸ் உட்பட நாடு முழுவதும் உள்ள நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 ஆயிரம் காவலர்கள், கலவரம் தடுப்பு பிரிவினர் பாரீஸில் களமிறக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டு உள்துறை அமைச்சகம் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளது. அவர்களில் 14,250 பாரீஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் நடவடிக்கைக்கு எதிராக சுதந்திரம் வேண்டும் என்றும், ஹெல்த் பாஸ் தேவையில்லை என்றும் முழங்கினர். 3 காவலர்களை போராட்டக்காரர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே பிரான்ஸ் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டம் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளது. ஹெல்த் பாஸை பார்கள், உணவு விடுதிகள், ரயில் நிலையங்கள், வர்த்தக கண்காட்சிகள், மருத்துவமனைகளுக்கும் நீட்டித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
02-ஆக-202107:45:45 IST Report Abuse
 N.Purushothaman ஆஸ்திரேலியாவில் இப்படி தான் போராட்டம் பண்ணினானுங்க ..இப்போ அங்கே பாதிப்பு அதிகமாகிறது ....ஒழுக்கமில்லாத இடதுசாரிகள் செயலால் இந்த பிரபஞ்சம் சர்வ நாசத்தை எதிர்கொள்கிறது ...
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-ஆக-202100:29:21 IST Report Abuse
தமிழவேல் அங்கு 50 சதவிகிதத்தினர் 2 ஊசிகளும் பெற்று விட்டார்கள். பாக்கியில் 50 சதவிகிதத்தினர் முதல் ஊசி பெற்றுள்ளனர். இம்மாதக்கடைசியில் மொத்தத்தில் 85 சததத்தை அடைந்துவிடலாம். மீதம் 15 சதவிகிதத்தினரில் வயது, வியாதிகளின் காரணங்களினால் ஊசி போட்டுக்கொள்ள முடியாதவர்களும், ஊசி போட்டுக்கொள்வது தேவை இல்லை என்பவர்களும்தான். இன்று சுமார் 7500 பேர்கள் ஆஸ்பத்திரிகளில் உள்ளனர். அதில் 84 சதவிகிதத்தினர் ஊசி போட்டுக்கொள்ளாதவர்கள். பாக்கியில் பலர் 1 ஊசிமட்டும் போட்டுக்கொண்டவர்கள். இதுதான் இன்றய நிலை. சானிட்டரி பாஸ் கட்டாயப்படுத்தவில்லை என்றால், வயது, வியாதிகளின் காரணங்களினால் ஊசி போட்டுக்கொள்ள முடியாதவர்களுக்கு இளைஞர்களால், பிள்ளைகளால் தொற்று ஏற்படலாம்.
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
01-ஆக-202119:09:26 IST Report Abuse
Palanisamy Sekar ஒரு அரசாங்கம் சொல்வதை மக்கள் பின்பற்றவேண்டும். கொரோனா பரவல் என்பது உலகளாவிய பிரச்சினை உயிர் பிரச்சினை. இந்த போராட்டத்தின் பின்னணியில் மதங்களும் இருப்பதாக அங்கிருந்து எனது நண்பர் கூறினார். இதெற்கெல்லாம் மதங்களை நுழைக்கணும்? நோயின் தாக்கம் என்றால் மரணம் நிச்சயம் என்கிற வயதில் உள்ளவர்களை எண்ணிப்பார்க்கணும். குடிகாரர்களின் கூட்டமும்..எதற்கெடுத்தாலும் சண்டைக்கு என்று குதிக்கும் கூட்டமும் உள்ளவரை உலகத்தில் கொரோனாவுக்கு சாவே கிடையாது. அது மேலும் துடிப்புடன்தான் இருக்கும். போராடுகின்ற கும்பலை பாருங்கள்..அப்பாவி போலீசுக்கும் பரவச்செய்து போய்விடுவார்கள். சட்டத்தை மதிக்காத ஜென்மங்களை அடித்து விரட்டவேண்டும்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-ஆக-202122:16:43 IST Report Abuse
தமிழவேல் இதில் உண்மை இல்லை. பொய் சொல்லும் வாய் க்கு போஜனம் கிடைக்காது. //இந்த போராட்டத்தின் பின்னணியில் மதங்களும் இருப்பதாக அங்கிருந்து எனது நண்பர் கூறினார்.// உங்க கட்சி தலைவர் மாஸ்க், இடைவெளி இல்லாமல் குத்தாட்டம் போட்டு கோவிட் வந்தது ஞாபகம் இருக்கா ? இன்னொரு தலை, ரெண்டு சின்ன தலையையும் மாஸ்க் இல்லாம கையைப் புடிச்சி தூக்கி காண்பிச்சது ? அப்போ, மாஸ்க் இல்லாதவங்களுக்கு 200 ரூ அபராதம் அமலில் இருந்தது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X