ஒலிம்பிக் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா 49 ஆண்டுக்குப் பின் தகுதி

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
டோக்கியோ:ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் 49 ஆண்டுக்குப் பின் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் இங்கிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றது. லீக் சுற்றில் 5ல் 4 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா, பட்டியலில் 2 வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து இன்று நடந்த

டோக்கியோ:ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் 49 ஆண்டுக்குப் பின் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் இங்கிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.



latest tamil news



டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றது. லீக் சுற்றில் 5ல் 4 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா, பட்டியலில் 2 வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து இன்று நடந்த காலிறுதியில் 'பி' பிரிவில் மூன்றாவது இடம் பெற்ற இங்கிலாந்தை எதிர்கொண்டது. போட்டி துவங்கிய 7வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் சிம்ரன்ஜீத் கொடுத்த பந்தை வாங்கிய தில்பிரீத், 'தில்லாக' பீல்டு கோல் அடித்தார். 16 வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்திக் அடித்த பந்தை, இங்கிலாந்து கோல் ஏரியா பகுதியில் இருந்த குர்ஜந்த் சிங், கோலாக மாற்றினர். முதல் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.


latest tamil news



இரண்டாவது பாதியில் 45 வது நிமிடம் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் இங்கிலாந்தின் சாமுவேல் ஒரு கோல் அடித்தார். போட்டி முடிய 7 நிமிடம் இருந்த போது, கேப்டன் மன்பிரீத் சிங் 'எல்லோ கார்டு' பெற்று வெளியேற, 10 வீரர்களுடன் விளையாடியது இந்தியா. 57 வது நிமிடம் தனி வீரராக பந்தை கொண்டு சென்ற இந்தியாவின் ஹர்திக் சிங், மின்னல் வேகத்தில் பந்தை வலைக்குள் தள்ளி, கோலாக மாற்றினார். முடிவில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதில், உலகின் 'நம்பர்-2' அணியான பெல்ஜியத்தை நாளை சந்திக்கிறது.


49 ஆண்டுக்குப் பின்...

கடைசியாக 1972ல் அரையிறுதியில் இந்தியா, 0-2 என பாகிஸ்தானிடம் தோற்றது. தற்போது 49 ஆண்டுக்குப் பின் மீண்டும் ஒலிம்பிக் ஹாக்கி அரங்கில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது இந்தியா. கடந்த 1980 சியோல் ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வென்ற போது, 6 அணிகள் மட்டுமே பங்கேற்றன. இதில் 'டாப்-2' இடம் பெற்ற இந்தியா, ஸ்பெயின் பைனலில் மோதின.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
02-ஆக-202106:02:51 IST Report Abuse
Kalaiselvan Periasamy சபாஷ் . தங்கம் வெல்ல வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel
01-ஆக-202121:30:27 IST Report Abuse
உண்மை சார், இந்தியா 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளது. 49 வருடங்கள் கழித்து இல்லை,41 வருடங்கள் என்பது தான் சரி.
Rate this:
Cancel
ravikumark - Chennai,இந்தியா
01-ஆக-202120:23:49 IST Report Abuse
ravikumark Wonderful...Team India. Our prayers for the superlative performance in the next 2 matches.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X