பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1,990 பேருக்கு கோவிட்: 2,156 பேர் நலம்

Updated : ஆக 01, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,990 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,156 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் மட்டும் 1, 58,646 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1988 பேரும் மற்ற மாநிலத்தவரகள் 2 பேரையும் சேர்த்து1,990

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,990 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,156 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் மட்டும் 1, 58,646 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 1988 பேரும் மற்ற மாநிலத்தவரகள் 2 பேரையும் சேர்த்து1,990 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,61,587 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,76,04,794 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,124 பேர் ஆண்கள், 866 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,96,478 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,65,071 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2,156 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,06,961 ஆக உயர்ந்துள்ளது.

26 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 6 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 20 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,102 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkeeran - Hosur,இந்தியா
02-ஆக-202111:36:56 IST Report Abuse
Nakkeeran மேலே குறிப்பிட்டுள்ள அட்டவணைப்படி பார்த்தால் வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மருத்துவமனையிலிருப்பவரை விட அதிகமாக இருக்கிறது .(34102) .இதில் அரசின் பங்களிப்பு பெரிதாக ஒன்றுமில்லை இறப்பும் மருத்துவமனைகளில்தான் அதிகம் இருக்கிறது .விழிப்புடன் இருந்தால் சரி
Rate this:
Cancel
SKANDH - Chennai,இந்தியா
02-ஆக-202107:07:52 IST Report Abuse
SKANDH இந்த மாசவுக்கு ஊர்ச்சுற்றி தான் வரப்போகுது. தினமும் காரோண பாதிப்பு அதிகமாகுது. கண்டுக்காமல். தன்னோட woodபஞ்சாயத்து வேலையை ஆரம்பித்துட்டாரா?
Rate this:
Cancel
Tamilan - Kongu Nadu,இந்தியா
01-ஆக-202122:55:39 IST Report Abuse
Tamilan ஆக....மீண்டும் விடியல் ஆரம்பம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X