அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்கேயம் அ.தி.மு.க ஊராட்சி ஒன்றியத் தலைவர் பின்னால் அணிவகுத்து வந்த திமுக ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள்: திமுக வினர் அப்செட், அதிமுக வினர் குஷி

Added : ஆக 01, 2021
Share
Advertisement
காங்கேயம்:திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகாவை சேர்ந்த மகேஷ்குமாரும், துணைத்தலைவராக திமுக வின் ஜீவிதாஜவஹர் உள்ளனர். ங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 ஊராட்சிகள் உள்ளன. இதில் சரி பாதி அதிமுகாவும், திமுகவினரும் வெற்றி பெற்று தலைவராக உள்ளனர். இந்நிலையில்,செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்து மனு அளிக்க அதிமுக வை சேர்ந்த ஊராட்சி
 காங்கேயம் அ.தி.மு.க ஊராட்சி ஒன்றியத் தலைவர் பின்னால் அணிவகுத்து வந்த திமுக ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள்: திமுக வினர் அப்செட், அதிமுக வினர் குஷி

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகாவை சேர்ந்த மகேஷ்குமாரும், துணைத்தலைவராக திமுக வின் ஜீவிதாஜவஹர் உள்ளனர். ங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 ஊராட்சிகள் உள்ளன. இதில் சரி பாதி அதிமுகாவும், திமுகவினரும் வெற்றி பெற்று தலைவராக உள்ளனர்.
இந்நிலையில்,செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்து மனு அளிக்க அதிமுக வை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய சேர்மன் மகேஷ்குமார் தலைமையில், அதிமுக மற்றும் திமுக ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர் என 50 க்கும் மேற்பட்டோர் அமைச்சரிடம் மனு அளிக்க ஒருவர் தோளில் மற்றொருவர் சாய்ந்து கொள்ளாத குறையாக ஒன்றாக வந்திருந்தனர்.
அமைச்சரிடத்தில் கொடுக்கப்பட்ட மனுவில், காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு தேவையான பல்வேறு சாலை பணிகள் , அமராவதி ஆற்றிலிருந்து புதிய குடிநீர் திட்டத்தை ஏற்படுத்தி ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும், சிவன்மலை அடிவாரம் முதல் மலை கோவில் வரை புதிய தார் சாலை அமைத்து, கிரிவல பாதையில் ஆண்கள்,பெண்களுக்கான சுகாதார வளாகம் ஆகியவற்றை சுற்றுலாத்துறை மூலம் ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதில் திமுக மற்றும் அதிமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றாக அதிமுக ஒன்றிய சேர்மேன் மகேஷ்குமார் தலைமையில் கைகோர்த்தபடி வந்திருந்ததை பார்த்து அமைச்சரே ஷாக்காகியுள்ளார். அதனை வெளிக்காட்டாமல் மனுவை பெற்றுக்கொண்டு, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்ரோடு ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் போல் குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டனர். அதிமுக ஒன்றிய சேர்மேன் மகேஷ்குமார் தலைமையில், திமுக ஊராட்சி பிரதிநிதிகளும் தன் உள்ளனர், அவர்களில் தனித்து இயங்க முடியாது என்பது போல் சென்றது திமுக வினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த சம்பவத்தால் அதிமுக தரப்பு குஷியாக உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X