பொது செய்தி

தமிழ்நாடு

'கற்போம் எழுதுவோம்' மதிப்பீட்டு முகாமில் 98 சதவீதம் பேர் பங்கேற்பு

Added : ஆக 01, 2021
Share
Advertisement
அன்னுார்:கற்போம் எழுதுவோம் திட்ட மதிப்பீட்டு முகாமில், 98 சதவீதம் பேர்பங்கேற்றனர்.மத்திய அரசு, 'கற்போம்எழுதுவோம்' என்னும் திட்டத்தை, கடந்த ஆண்டு நவம்பரில் துவக்கியது. இந்தத் திட்டத்தில், 15வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு, அடிப்படைக் கல்வி கற்பிக்கப்படுகிறது.இந்த திட்டத்தில், அன்னுார் ஒன்றியத்தில், துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்ட, 56
 'கற்போம் எழுதுவோம்' மதிப்பீட்டு முகாமில் 98 சதவீதம் பேர் பங்கேற்பு

அன்னுார்:கற்போம் எழுதுவோம் திட்ட மதிப்பீட்டு முகாமில், 98 சதவீதம் பேர்பங்கேற்றனர்.மத்திய அரசு, 'கற்போம்எழுதுவோம்' என்னும் திட்டத்தை, கடந்த ஆண்டு நவம்பரில் துவக்கியது. இந்தத் திட்டத்தில், 15வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு, அடிப்படைக் கல்வி கற்பிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில், அன்னுார் ஒன்றியத்தில், துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்ட, 56 மையங்களில், ஆயிரத்து 120 பேர் சேர்ந்திருந்தனர். இவர்களுக்கு மதிப்பீட்டு முகாம் கடந்த, 29, 30, 31ம் தேதிகளில் நடந்தது.இதில், அன்னுார் ஒன்றியத்தில், 98 சதவீதம் பேர் தேர்வு எழுதினர். வினாத்தாள், வாசித்தல், எழுதுதல், எண் அறிவு என மூன்று பிரிவுகளாக தலா, 50 மதிப்பெண்களுடன் தரப்பட்டிருந்தன.
இதில், தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டம் குறித்தும், கேள்வி கேட்கப்பட்டிருந்தது. தேர்வு எழுத, பள்ளிக்கு வர முடியாத சிலரின் வீட்டுக்கே சென்று, ஆசிரியர்கள் வினாத்தாளை கொடுத்து, தேர்வு எழுத வைத்து, திரும்பப் பெற்றனர். மதிப்பீட்டு முகாமை, வட்டார கல்வி அலுவலர் ரங்கராஜ் ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X