பொது செய்தி

தமிழ்நாடு

பாதியில் நிற்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: வீணாகுது ரூ.10 லட்சம்

Added : ஆக 01, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:ரேயான் நகரில், 10 லட்சம் ரூபாய் செலவில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, கடந்த ஓராண்டாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதை செயல்பாட்டுக்கு கொண்டு வரும்படி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிறுமுகை அருகே இலுப்பநத்தம் ஊராட்சியில், ரேயான் நகரில், 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நகருக்கு பவானி ஆற்றிலிருந்து குடிநீர், சுழற்சி
 பாதியில் நிற்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: வீணாகுது ரூ.10 லட்சம்

மேட்டுப்பாளையம்:ரேயான் நகரில், 10 லட்சம் ரூபாய் செலவில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, கடந்த ஓராண்டாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதை செயல்பாட்டுக்கு கொண்டு வரும்படி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிறுமுகை அருகே இலுப்பநத்தம் ஊராட்சியில், ரேயான் நகரில், 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நகருக்கு பவானி ஆற்றிலிருந்து குடிநீர், சுழற்சி முறையில் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்தாண்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், 10 லட்சம் ரூபாய் செலவில், அமைக்கும் பணி தொடங்கியது.ஒரு கன்டெய்னரில் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் குடிநீர் குழாய் இணைப்புகள் ஏதும் வழங்கவில்லை; பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து ரேயான் நகர் பொதுமக்கள் கூறுகையில், " கன்டெய்னரில் அமைத்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் திறக்கப்படவில்லை. இதில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இலவசமாக வழங்கப்படுகிறதா அல்லது கட்டணம் ஏதேனும் செலுத்த வேண்டுமா என்பது குறித்து, ஏதும் அறிவிக்கப்படவில்லை.இதில், 10 லட்சம்ரூபாய்க்கு இயந்திரங்கள் பொருத்தப்பட்டனவா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, இந்த சுத்திகரிப்பு நிலையத்தை விரைவில் செல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்" என்றனர்.ஊராட்சித் தலைவர் ரங்கசாமியிடம் கேட்டபோது, " குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க டெண்டர் எடுத்தவருக்கு பணம் வழங்காததால், அவர் குடிநீர் குழாய் இணைப்பு வழங்காமல் உள்ளார்.மாவட்ட நிர்வாகம், இதைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X