கர்நாடக மாநிலத்துக்கு தூதுவராக செல்ல தயார்! கேள்வி கேட்ட தயாநிதிக்கு அண்ணாமலை பதிலடி

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (62) | |
Advertisement
'தமிழக பா.ஜ., போராடினாலும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்' என, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். இது தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., தயாநிதியிடம் கேட்டபோது, 'இந்த பிரச்னையில் சுமுக தீர்வு காண, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை துாதுவராக அனுப்புவோம்' என்று பதில் அளித்தார். உடனே தயாநிதிக்கு அண்ணாமலை, 'டுவிட்டரில்' பதிலடி கொடுத்தார்.அவரது
 கர்நாடகா ,, தூதுவர்,  தயார்! தயாநிதி,அண்ணாமலை,பதிலடி

'தமிழக பா.ஜ., போராடினாலும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்' என, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

இது தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., தயாநிதியிடம் கேட்டபோது, 'இந்த பிரச்னையில் சுமுக தீர்வு காண, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை துாதுவராக அனுப்புவோம்' என்று பதில் அளித்தார். உடனே தயாநிதிக்கு அண்ணாமலை, 'டுவிட்டரில்' பதிலடி கொடுத்தார்.அவரது டுவிட்டர் பதிவு:


கொரோனா தொற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்த போது, 'டி - 20' கிரிக்கெட் போட்டிகளை ரசித்து கொண்டிருந்தார் தயாநிதி. எப்படியோ மேகதாது அணை பற்றி கவலைப்பட்டதற்கு நன்றி.கூடவே, சிறப்பு விமானம் ஒன்றை தயாநிதி அனுப்பி வைத்தால், தமிழகத்தின் ஏழை விவசாயிகளை அழைத்துக் கொண்டு, கர்நாடகாவுக்கு துாது செல்ல தயாராக இருக்கிறேன். இதை,தயாநிதியின் மாமா முதல்வர் ஸ்டாலின்அனுமதிப்பாரா?இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.இதற்கு, தயாநிதி தரப்பிலிருந்து பதில் இல்லை.

இந்நிலையில், பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமை பிரச்னை காவிரி. அந்த நதியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. தமிழக மக்கள் நலனுக்காக, எப்படியாவது அதை தடுக்க முயற்சிக்கிறோம். எப்படியும் தமிழக அனுமதி இல்லாமல், கர்நாடக அரசு அணை கட்ட
முடியாது.


இதை, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர், தி.மு.க., அமைச்சர் துரைமுருகனிடம் தெளிவாக கூறி விட்டார். இருந்தாலும், ஏதோ ஒரு காரணத்துக்காக அணை கட்ட அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டால், அது தமிழகத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தி விடும். அதற்காக, மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என, தஞ்சையில் உண்ணாவிரத போராட்டத்தை தமிழக பா.ஜ., முன்னெடுக்கிறது.

இப்படி எதையும் செய்யாமல், வாயிலேயே வடை சுடுகிறவர்கள், ஆக்கப்பூர்வமாக ஒரு விஷயத்தை நோக்கி போராடும் போது, 'கர்நாடகத்துக்கு துாதுவராக போகிறீர்களா?' என்று கேட்டால், அது கேலி தானே. அதை தொடர்ந்து தான், டுவிட்டரில் தயாநிதிக்கு பதில் சொன்னேன். அதன்பின், அவர் எனக்கு எந்த பதிலும் சொல்லவில்லை; சொல்ல முடியாது.

இரு மாநிலங்களுக்கு இடையிலான உணர்வு ரீதியிலான பிரச்னை இது. இதில், மனதுக்கு தோன்றியதை எல்லாம் பேசி, அதையே செய்ய முற்பட்டால், நோக்கம் தான் சிதையும்; மக்கள் பிரச்னைகள் தீராது.அதனால், எல்லாரும் இப்பிரச்னையில் உணர்வுடன் நடந்து கொள்வது அவசியம். யாரையும் வம்புக்கு இழுக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. இவ்வாறு அவர்
கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
10-ஆக-202108:51:38 IST Report Abuse
madhavan rajan தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சி எந்த திட்டத்தையும் செயல்படுத்தும் திறமையற்றது என்பதை எல்லா அமைச்சர்களும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எந்த விஷயத்தைக் கேட்டாலும் தமிழக பாஜக தலைவர்கள் செய்வார்களா என்று கேட்கிறார்கள். இதற்கு இவர்கள் எதற்கு ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். சென்ற அதிமுக ஆட்சியில் மத்தியில் கூட்டணியில் இருந்தபோது திமுக எவ்வளவு திட்டங்களை பெற்றுத்தந்தது? இவர்கள் ஆட்சியில் இருந்துகொண்டு நோட்டாவை விட பின் தங்கிய கட்சி என்று கிண்டல் செய்த கட்சியை உதவி செய்யுங்கள் என்று கேட்பது பிச்சை எடுப்பதை விட கேவலமானது.
Rate this:
Cancel
R chandar - chennai,இந்தியா
04-ஆக-202118:20:13 IST Report Abuse
R chandar What ever the dam they want to construct let them construct , but they need to give water as per cauvery tribunal verdict , the dam should be controlled by central government and all dams should be under the control of central water board department . If possible all dams and reservoir water passed through other states should be under control of central and necessary discharge of water as per tribunal must be maintained and assured
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
04-ஆக-202115:03:11 IST Report Abuse
unmaitamil மாமா கிட்ட கேட்டாரு..... ஆனா மாமாதான் இன்னும் பதில் சொல்லமுடியுமா முழிக்கிறாரு. மாமா பதில சொல்லுங்க மாமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X