அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பென்னிகுயிக் இல்லத்தை இடித்தால் அ.தி.மு.க., போராட்டத்தில் குதிக்கும்'

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை:'மதுரையில், கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்த இடத்தை இடித்து, அங்கு கருணாநிதி நுாலகம் கட்டினால், அ.தி.மு.க., போராட்டம் நடத்தும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ., - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர் அறிவித்துள்ளனர்.அவர்களின் கூட்டறிக்கை: தன் சொந்தப் பணத்தை செலவு செய்து, முல்லை பெரியாறு அணையை உருவாக்கி, தமிழக தென்மாவட்ட மக்களின்
 'பென்னிகுயிக், இல்லம், இடித்தால், அ.தி.மு.க., போராட்டத்தில், குதிக்கும்'

சென்னை:'மதுரையில், கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்த இடத்தை இடித்து, அங்கு கருணாநிதி நுாலகம் கட்டினால், அ.தி.மு.க., போராட்டம் நடத்தும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ., - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர் அறிவித்துள்ளனர்.

அவர்களின் கூட்டறிக்கை: தன் சொந்தப் பணத்தை செலவு செய்து, முல்லை பெரியாறு அணையை உருவாக்கி, தமிழக தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்தவர் பென்னிகுயிக். அவரது நினைவு இல்லத்தை இடித்து விட்டு, கருணாநிதி நுாலகம் அமைக்க, தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு வரலாற்றை அழித்து, இன்னொரு வரலாற்றை உருவாக்க நினைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மதுரை மாநகரில், நத்தம் செல்லும் சாலையில் பென்னிகுயிக் வாழ்ந்துள்ளார். அதற்கு ஆதாரமாக, தன் உடைகளை சுவரில் தொங்க விடுவதற்கு ஸ்டாண்ட், பெரியாறு இல்லம் என, ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இருந்துள்ளது.இது உண்மை என்பதால் தான், மதுரை மாநகர பொதுப்பணித்துறை வளாகத்தில், தி.மு.க., ஆட்சி காலத்தில், 2000ம் ஆண்டில், ஜான் பென்னிகுயிக்கின் முழு உருவச்சிலை, கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

அந்த கல்வெட்டில், 'இப்புவியில் நான் வந்து செல்வது ஒரு முறை தான்; எனவே, நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும். அதை உடனே நிறைவேற்ற வேண்டும். 'இதை தள்ளி வைப்பதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ இடம் இல்லை. ஏனெனில் மீண்டும் ஒருமுறை நான் இப்புவியில் வரப்போவதில்லை' என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சொற்களுக்கு சொந்தக்காரர் கருணாநிதி தான் என, அப்பகுதி மக்களும் விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.

எனவே, பென்னி குயிக் நினைவு இல்லத்தை இடித்துவிட்டு, அங்கு கருணாநிதியின் பெயரில் நுாலகம் அமைக்கும் முடிவு, சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம். யாருக்கும் ஆட்சேபனை இல்லாத இடத்தில், கருணாநிதி நுாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் எதிர்ப்பை மீறி, பென்னிகுயிக் நினைவு இல்லத்தில் கருணாநிதி நுாலகம் அமைக்கப்படுமானால், அ.தி.மு.க., போராட்டத்தில் குதிக்கும்.இவ்வாறு ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., கூறியுள்ளனர்.இதேபோல, 'மதுரையில், கருணாநிதி நினைவு நுாலகம் அமைக்க, பென்னிகுயிக் வாழ்ந்த இல்லத்தை இடிக்கக்கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாசும் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
maya - Junnagate,இந்தியா
02-ஆக-202117:31:09 IST Report Abuse
maya 1911ம்ஆண்டு பென்னி குயிக் இறந்தார். அதற்கு பிறகு ஒரு ஆண்டு கழித்து தான் இந்த நினைவு இல்லம் கட்டப்பட்டது. செத்தவரா ஆவியாக வந்து அங்கு வாழ்ந்தார். அடிமைகளே இதை எல்லாம் நினைத்துபார்த்தீர்களா?
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
02-ஆக-202112:36:15 IST Report Abuse
மணி இப்புவியில் நான் வந்து செல்வது ஒரு முறை தான் எனவே, நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும். அதை உடனே நிறைவேற்ற வேண்டும். 'இதை தள்ளி வைப்பதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ இடம் இல்லை. ஏனெனில் மீண்டும் ஒருமுறை நான் இப்புவியில் வரப்போவதில்லை'/இதுபோல நீங்கள் புரிந்த நற்செயல் ஏதுமுண்டா?
Rate this:
Cancel
02-ஆக-202112:20:00 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் நேற்று தான் பார்த்தோமோ உங்கள் தொண்டர்கள் கூடிய கூட்டத்தை, இன்று கூட ஒரு MP விளக்கம் இப்படியே விலகி கொண்டு இருந்தால் கடைசியில் நீ இந்த கட்சியை ஆண்டான் அடிமையிடம் விற்று விட்டு தான் வருவ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X