பொது செய்தி

தமிழ்நாடு

கணக்கு திருத்தம் என்ற பெயரில் மறைமுகமாக சொத்து வரி உயர்வு?

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை--வரி கணக்கில் திருத்தம் செய்வதாக கூறி, உள்ளாட்சி அமைப்புகள் மறைமுகமாக சொத்து வரியை உயர்த்தி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வீடுகளுக்கு சொத்து வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியே, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதான வருவாய் ஆதாரம். கடந்த 2018 ஏப்ரல் 1ல் சொத்து வரி உயர்வு அமலானது. அப்போது, 50 - 100

சென்னை--வரி கணக்கில் திருத்தம் செய்வதாக கூறி, உள்ளாட்சி அமைப்புகள் மறைமுகமாக சொத்து வரியை உயர்த்தி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.latest tamil newsதமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வீடுகளுக்கு சொத்து வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியே, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதான வருவாய் ஆதாரம். கடந்த 2018 ஏப்ரல் 1ல் சொத்து வரி உயர்வு அமலானது. அப்போது, 50 - 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. இந்த உயர்வை அமல்படுத்துவதற்கான கணக்கீட்டில் அதிகாரிகள் குளறுபடி செய்ததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதையடுத்து, சொத்து வரி உயர்வை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்தது. அதனால், மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு உள்ளாட்சி பகுதிகளில் மறைமுகமாக சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சட்டசபை தேர்தலின் போது தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், 'சொத்து வரி உயர்த்தப்படாது' என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், உள்ளாட்சிகளின் சொத்து வரி கணக்கில் 30 - 40 சதவீதம் வரை கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

தனித்தனியாக ஒவ்வொரு சொத்து வரி கணக்கையும் திருத்தம் செய்துள்ளதாக கூறி, சொத்து வரியாக கூடுதல் தொகை கட்ட, மக்கள் நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படும் கணக்குகள், திடீரென திருத்தப்பட்டு கூடுதல் தொகை விதிப்பதும், மறைமுக சொத்து வரி உயர்வாக உள்ளது.வரி வசூல் அதிகரித்தால் தான் ஊதியம் என, அரசு அறிவுறுத்துவதால், உள்ளாட்சி அதிகாரிகள் இப்படி செயல்படுகின்றனர்.


latest tamil newsதமிழக அரசு தலையிட்டு, மறைமுக சொத்து வரி உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும். தவறினால், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பதில் அளிக்கும் நிலை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து நகர்ப்புற உள்ளாட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் நிதி நெருக்கடியில் உள்ளன. அதே சமயம், சொத்து வரி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.தனிப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்வது வழக்கமான பணி தான். இதில் ஆட்சேபம் இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியில் பொதுமக்கள் மேல்முறையீடு செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
02-ஆக-202112:31:22 IST Report Abuse
raja வீடுகளுக்கு "விடியல்" வந்துவிட்டது என்று குதுகூலப்படுங்கள் தமிழர்களே.....
Rate this:
Cancel
CHARUMATHI - KERALA,இந்தியா
02-ஆக-202112:15:04 IST Report Abuse
CHARUMATHI money from middle class tax payers are being lavishly spent on freebies and other political activities. tax payers sd form a union and sd not co operate with government who for votes give freebies to so called BPL FAMILIES WHICH ARE MAINLY KAZHAGA KANMANIGAL ENOUGH IS ENOUGH . BOTH DRAVIDIAN PARTIES GIVE PRIORITY TO TRADERS AND TO THEIR CADRES FAMILIES . SUFFERERS ARE WORKING CLASS. THOUGHT ATLEAST MKS WD UNDERSTAND AND DO GOOD. BUT NOTHING HAPPENED SO FAR
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
02-ஆக-202111:22:47 IST Report Abuse
duruvasar எதையும் விஞ்ஞான முறையில் செய்யும் பாரம்பரத்தில் வந்தவர் நமது முதல்வர். எனவே இந்த மாதிரியான வேலைகளை இருவரும் சேர்ந்து சிறப்பாக செய்வார்கள். விடியலுக்கும் விலையுண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X