சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

சிறார்களை காப்போம்!

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
எஸ்.பாலசுப்பிரமணியன், காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஆண்டு மார்ச்சில் ஆரம்பித்த கொரோனா தடுப்பு ஊரடங்கு, 18 மாதங்களாக தொடர்ந்து மக்களை இம்சித்து வருகிறது.தினக்கூலி, சாலையோர வியாபாரி, டீக்கடைக்காரர் போன்ற எளிய மனிதர்கள், தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க, அரசு உதவ வேண்டும்.பள்ளி
 இது உங்கள் இடம்



எஸ்.பாலசுப்பிரமணியன், காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

கடந்த ஆண்டு மார்ச்சில் ஆரம்பித்த கொரோனா தடுப்பு ஊரடங்கு, 18 மாதங்களாக தொடர்ந்து மக்களை இம்சித்து வருகிறது.தினக்கூலி, சாலையோர வியாபாரி, டீக்கடைக்காரர் போன்ற எளிய மனிதர்கள், தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க, அரசு உதவ வேண்டும்.

பள்ளி திறக்காத நிலையில் ஏராளமான மாணவர்கள், குடும்ப வறுமை காரணமாக குழந்தை தொழிலாளராக மாறியுள்ளனர்.அதிலும் தாய், தந்தை அல்லது இதில் யாரோ ஒருவரை இழந்த குழந்தையின் அவல நிலையை வார்த்தைகளால் வடிக்க முடியாது.வறுமை, இழப்பு ஆகியவற்றால், 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார சிக்கலில் இருந்து சிறார்களை மீட்டெடுப்பது மட்டுமின்றி, உளவியல் ரீதியாகவும் அவர்களை பாதுகாக்க, அரசு ஒத்துழைக்க வேண்டும்.சிறு வயதில் ஏற்படும் உளவியல் பாதிப்பு மட்டுமே, எதிர்கால வாழ்க்கையை சூனியம் ஆக்கிவிடுகிறது; அது, சமூகத்தையும் பாதிக்கிறது. குழந்தைகளிடம் அன்பு, நட்பு பாராட்டி, அவர்களை நல்ல குடிமகன்களாக உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.lll

மத்திய அரசின் சரியான பாதை!

சுந்தாசா, கும்பகோணத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வந்த அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், 20-21ல், 31 ஆயிரத்து 817 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளன. அதுவும் கொரோனா பெருந் தொற்று காலத்தில் இந்த லாபம் சாத்தியப்பட்டுள்ளது எனும் போது ஆச்சரியம் பிறக்கிறது. இதற்கு நிறுவனங்களிடம் இருந்து கடன் வசூலிக்க, 2016ல் உருவாக்கப்பட்ட ஐ.பி.ஆர்.பி., என்ற திவால் தீர்வு திட்டம் முக்கிய காரணம் என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் பல வகையில் பிரிந்திருந்த அரசுடைமை வங்கிகள் இணைக்கப்பட்டதால், பெருமளவில் நிர்வாக செலவு குறைந்து உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வாராக் கடன் என்பது இந்திய வங்கிகளில் பெரும் பிரச்னையாக இருந்து வந்துள்ளது. சட்டத்தின் ஏதாவது ஒரு கதவு திறந்தே இருப்பதால், வாராக்கடன் சம்பந்தமான பிரச்னையில் நீதிமன்றத்திலும் தீர்வு கிடைக்கவில்லை.கடனை திருப்பி செலுத்தாத மல்லையா, நிரவ் மோடி, சோக்சி போன்றோரின் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க துறை கைப்பற்றி, அவற்றை விற்பனை செய்தது.

இதன் மூலம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடனில், 80 சதவீதம் வரை வங்கிகள் திரும்ப பெற்றுள்ளன. இதே போல 'எஸ்ஸார்' கம்பெனியிடம் இருந்து, 8,000 கோடி ரூபாய் அளவுக்கு எஸ்.பி.ஐ., திரும்ப பெற்றுள்ளது.கடன் வசூலில் இவை ஆரம்ப புள்ளி. இது தொடர்ந்தால், வங்கிகள் பெருமளவு லாபகரமாக இயங்க முடியும்.கடனை திருப்பி செலுத்தாத போது எகிறி குதித்த ஊடகங்கள், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சொத்துக்களை பற்றி எந்த செய்தியும் வெளியிடவில்லை.'கார்ப்பரேட்'டுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என்று கோஷம் போட்டோர், இப்போது முகத்தை மறைத்து கொள்கின்றனர்.

மத்திய அரசு கடந்த அக்டோபரில், வங்கிகள் ஒழுங்குமுறை கொள்கையில் திருத்தம் செய்து, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் ஆளுகைக்கு உட்படுத்தியது.மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில், 'நஷ்டத்தை சந்தித்து வரும் இரு அரசுடைமைஆக்கப்பட்ட வங்கிகள் தனியார் மயமாக்கப்படும்' என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்து உள்ளார்.இதோடு நிற்காமல், கிராமப்புற கூட்டுறவு வங்கிகளையும், ரிசர்வ் வங்கி ஆளுகைக்கு உட்படுத்த வேண்டும்.மத்திய அரசு சரியான பாதையில் செல்கிறது... அப்படியே செல்லட்டும்!

மூன்றாவது அலையில் சிக்குவோமா?
ஆர்.நடராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:


இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றின் இரண்டு அலைகளை கடந்து, தற்போது மூன்றாவது அலை எப்படியிருக்குமோ என அச்சத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது தமிழகம்.

இரண்டாவது அலையில், மிக அதிகமாக பாதிக்கப்பட்டது, கோவை தான். இதற்கு காரணம் அண்டை மாநிலமான கேரளா. அம்மாநிலத்தில் இருந்து தான் நோய் தொற்று மிக அதிகமாக கோவைக்கு பரவியது.தற்போது தமிழகம் நோய் தொற்றிலிருந்து ஓரளவு விடுபட்டு உள்ளது. ஆனால் சமீபநாட்களாக தொற்று எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. மூன்றாவது அலை மெல்ல துவங்கியுள்ளது.

இதுவரை நோய் தொற்று பரவலில், நம் நாட்டில் 50 சதவீத பாதிப்பு கேரளாவில் மட்டும் உள்ளது. அதாவது, நம் நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் பேரில், 25 ஆயிரம் பேர் கேரளாவில் உள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.அண்டை மாநிலத்தில் நோய் பரவல் அதிகமாக இருப்பது குறித்த விஷயத்தில், தமிழக அரசு அலட்சியமாக உள்ளது.

தமிழகத்தில் நோய் பரவல் கட்டுக்குள் இருக்கும்போது, அண்டை மாநிலங்களில் இருந்து அதை ஏன் வரவழைக்க வேண்டும்?கேரளாவில் இருந்து நோய் பரவினால் முதலில் பாதிக்கப்படுவது, கோவை தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

எனவே, தமிழக - கேரள எல்லை உள்ள இடங்களில் பரிசோதனை சாவடிகள் அமைக்க வேண்டும். கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி, பயணியரை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.தற்போது கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சர்வ சாதாரணமாக தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன

இதன் விளைவு, நோய் தொற்றை அதிகரிக்கும். மீண்டும் ஊரடங்கு போடப்படும். தமிழக மக்கள் துயரத்தில் சிக்க போகின்றனர்.வரும்முன் காப்போம் என்ற கொள்கையை, தமிழக அரசு ஏன் மறந்தது?கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தினாலே மூன்றாவது அலையை சமாளித்து விடலாம்.lll

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veeramani - karaikudi,இந்தியா
02-ஆக-202112:15:03 IST Report Abuse
veeramani அதிகம் படித்தவர்கள் என பெருமை தட்டும் கேரளாவில்தான் வாழ்வை சூறையாடும் நோய் பரவியுள்ளது. எதற்கு எடுத்தலும் எதிர்ப்பு, சட்டத்தின்முலம் தடை, தொழிற்ச்சாலைகளில் வேலை நிறுத்தம் போன்ற பல விஷயங்களில் படித்தவர்கள் ஈடுபாட்டுலுநர். இதில் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு எனது சென்று திரும்புவதால் ஆந்த நட்டு கலாச்சாரம் பரவியதால் இலவச இணைப்பாக மற்ற நோய்தொற்றுகளும் நுழைகின்றன. இதில் கேரளா அரசு கடுமையாக இருந்தால் இந்தியாவிற்குள் எந்த நோய் தோற்றும் நுழைவதற்கு வாய்ப்பு இல்லை.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-ஆக-202106:09:17 IST Report Abuse
D.Ambujavalli இங்கிருந்து திருட்டு ரேஷன் அரிசி, மணல் ஏற்றுமதி செய்யும் லாரிகளிலேயே அங்கிருந்து தொற்று ‘இறக்குமதி’ ஆக வாய்ப்புண்டு எந்த அரசும் தும்பை விட்டு வாலைப்பிடிப்பதுதான் வழக்கமாகி விட்டது இப்போது அடித் தள்ளுபடி கூட்டம் எத்தனை பேருக்கு பரப்புமோ என்று திகிலாக உள்ள நிலையில், வெளி மாநிலத்திலிருந்து வேறு வர வேண்டுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X