இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்ராஜ்யசபா எம்.பி., கைதுஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பழங்குடி மக்களின் வழிபாட்டு தலமான ஜெய்ப்பூர் அமகார் கோட்டையை ஹிந்துக்கள் ஆக்கிரமிப்பதாக குற்றம்சாட்டி, அங்கிருந்த காவி கொடிகளை சுயேச்சை எம்.எல்.ஏ., ராம்கேஷ் மீனா தலைமையிலானோர் சமீபத்தில் அகற்றினர். தங்கள் மதத்தை எம்.எல்.ஏ., தவறாக வழிநடத்துவதாக கூறிய பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., கிரோரி மீனா, அங்கு தங்கள்
today, crime, round up, இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்ராஜ்யசபா எம்.பி., கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பழங்குடி மக்களின் வழிபாட்டு தலமான ஜெய்ப்பூர் அமகார் கோட்டையை ஹிந்துக்கள் ஆக்கிரமிப்பதாக குற்றம்சாட்டி, அங்கிருந்த காவி கொடிகளை சுயேச்சை எம்.எல்.ஏ., ராம்கேஷ் மீனா தலைமையிலானோர் சமீபத்தில் அகற்றினர். தங்கள் மதத்தை எம்.எல்.ஏ., தவறாக வழிநடத்துவதாக கூறிய பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., கிரோரி மீனா, அங்கு தங்கள் சமுதாய கொடியை நாட்டினார். பொது அமைதியை சீர்குலைத்ததாக அவரை போலீசார் கைது செய்தனர்.

ரயிலுக்குள் விழுந்த பெண்

செகந்திராபாத்: தெலுங்கானாவின் செகந்திராபாத் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலில் ஏறிய பெண், ரயில் பெட்டிக்கும், நடைமேடைக்கும் நடுவே உள்ள இடைவெளியில் தவறி விழுந்தார். கைப்பிடியில் இருந்து கைகளை எடுக்காமல் அலறினார். அங்கிருந்த ரயில்வே போலீஸ்காரர் தினேஷ் சிங் ஓடிவந்து, அவரை காப்பாற்றினார். இந்த 'வீடியோ'வை சமூக வலைதளத்தில் ரயில்வே அமைச்சகம் பகிர்ந்ததுடன், தினேஷ் சிங்கை பாராட்டி உள்ளது.

அதிகாரிகள் தொந்தரவு

புதுடில்லி: உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ.,வால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் பாதுகாப்பு அதிகாரிகள் தன்னையும், குடும்பத்தினரையும் துன்புறுத்துவதாக, அப்பெண் டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


தமிழக நிகழ்வுகள்

வழிப்பறி செய்தவர் கைது

கோவை:போத்தனுாரை சேர்ந்தவர்கள், தாவூத் ஷெரீப், 39 மற்றும் பாலகிருஷ்ணன். கடந்த, ஜூலை, 29ம் தேதி இருவரும், ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள கீதா ஹால் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அவர்களை வழிமறித்து, கத்தி முனையில், ரூ.1,200 பணம், இரு மொபைல்போன்களை பறித்து கொண்டது. தாவூத் ஷெரீப் வசதியானவர் என, நினைத்து அவரை காரில் கடத்தியது. தொடர்ந்து அவரை தாக்கி, உக்கடத்தில் இறக்கி விட்டனர். தாவூத் ஷெரீப் அளித்த புகாரின் அடிப்படையில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில், கும்பலை சேர்ந்த குனியமுத்துார், திருவள்ளுவர் நகரை சேர்ந்த முஜ்பூர் ரஹ்மான், 29 என்பவரை ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசார் விசாரணையில், முஜ்பூர் ரஹ்மான் மீது, கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா உள்ளிட்ட 15 வழக்குகள் இருப்பது தெரிந்தது. வழக்கில் தொடர்புடைய அப்துல் ஜலீல், நிமேஷ், சுதர்சன் உள்ளிட்ட மூவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

கணவர் கொலை; மனைவி கைது

காஞ்சிபுரம்: ‛குடி'போதையில் தகராறு செய்த கணவரை கொலை செய்த மனைவி, அவரின் தம்பியும், கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம், மளிகை செட்டித் தெருவை சேர்ந்தவர் நவ்ஷாத், 35. ஆட்டோ டிரைவர். தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று வழக்கம் போல் சண்டை நடந்துள்ளது. அன்று இரவு, கணவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக அவரது மனைவி ரசியா, 30, காவல் நிலையத்தில் ஆஜரானார். போலீசார் விசாரணையில் ரசியாவின் தம்பி லோகேசும், 25, சேர்ந்து வெட்டியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
ஏற்கனவே, நவ்ஷாத், லோகேஷை அரிவாளால் தாக்கியுள்ளார். சம்பவத்தன்று, 'குடி'போதையில், நவ்ஷாத் வீட்டில் தகராறு செய்துள்ளார். லோகேஷ் சென்றதும், அவர் மீது தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஷ், அக்கா கணவரை, அரிவாளால் வெட்டியுள்ளார். மனைவியும் சேர்ந்து வெட்டியதில், நவ்ஷாத் இறந்தார். தம்பியை தப்பிக்க வைக்க, நான் தான் கொலை செய்தேன் என, ரசியா போலீசில் சரண் அடைந்தார். விசாரணையில் உண்மை வெளியானது. அக்கா, தம்பி இருவரையும் கைது செய்துள்ளோம். இவ்வாறு போலீஸார் கூறினர்.


latest tamil newsடூ விலர் மோதி தீப்பிடித்த கார்; காரில் சென்ற ஒருவர் பலி இரு சிறுவர்கள் காயம்

பெரம்பலுார்-பெரம்பலுார் அருகே காரும், டூ - வீலரும் மோதி தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்; இரு சிறுவர்கள் காயம் அடைந்தனர்.

திருச்சி, கரூர் 'பைபாஸ்' ரோடு பகுதியைச் சேர்ந்தவர், வக்கீல் புனிதன். இவரது மனைவி ஷீலா. இவர்கள், சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று மாலை காரில் வந்து கொண்டிருந்தனர். திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த இளம்பரிதி காரை ஓட்டினார்.பெரம்பலுார் மாவட்டம் காரை பிரிவு ரோடு பகுதியில் வந்தபோது, காரை கிராமத்தில் இருந்து டூ - வீலரில் வந்தவர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, டூ - வீலரும், காரும் எதிர்பாராதவிதமாக மோதியதில் இரண்டுமே தீப்பிடித்தன.காரில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கி விட்டதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். டூ - வீலரில் வந்த பெரியசாமி, 60, இவரது பேரன்கள் அஜய், 6; பரணி, 3, ஆகியோர் காயம் அடைந்தனர்.மூவரும் பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு பெரியசாமி இறந்தார். இரு சிறுவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலுார் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். காரும், டூ - வீலரும் எரிந்து சேதமடைந்தன.

தகவல் கொடுத்த தலையாரியை முட்டி போட வைத்த மணல் கடத்தல் கும்பல்

புதுக்கோட்டை-புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே தாழனுார் பகுதியில் கிராம உதவியாளராக பணிபுரிபவர் பெரியசாமி, 45. இவர், மணல் கடத்தல் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஆவுடையார்கோவில் மருத்துவமனை வழியாக பெரியசாமி சென்றபோது, மூன்று பேர் கும்பல் அவரை வழிமறித்து, ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளது.பின், 'மணல் கடத்தல் பற்றி எதற்கு அதிகாரிகளுக்கு தெரிவித்தாய்' எனக் கேட்டு, தரையில் உப்பை கொட்டி, அதன் மீது பெரியசாமியை முட்டி போட வைத்து தாக்கியுள்ளது. அந்த கும்பலிடம் இருந்து தப்பிய பெரியசாமி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆவுடையார்கோவில் போலீசார், மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் இருவர் தற்கொலை

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.* ஊட்டியை சேர்ந்தவர் சரண்ராஜ், 32. இவர், கடந்த ஆறு மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மன வருத்தத்தில் இருந்த இவர், மேட்டுப்பாளையம் கிறிஸ்டியன் காலனியில் உள்ள, மாமா ஐயப்பன் வீட்டிற்கு வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.* மேட்டுப்பாளையம்ஓடந்துறை வினோபாஜி நகரைச் சேர்ந்தவர், பாலம்மாள், 86. இவர், மகன் மாரியப்பன் வீட்டில் வசித்து வந்தார். வயதாகிவிட்டதால், அனைவருக்கும் பாரமாக இருப்பதாக, மகனிடம் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில், பவானி ஆற்றில் குதித்து, தற்கொலை செய்துகொண்டார்.இருசம்பவங்கள் குறித்தும், மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X