பொது செய்தி

இந்தியா

ஐ.இ.எஸ்., தேர்வில் விவசாயி மகன் சாதனை

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த விவசாயி மகன், ஐ.இ.எஸ்., தேர்வில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.கடந்த ஆண்டு அக்டோபரில் ஐ.இ.எஸ்., எனப்படும் இந்திய பொருளாதார சேவைகள் பிரிவுக்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. அதில் ஜம்மு - காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை விவசாயியின் மகனான தன்வீர் அகமது கான் பங்கேற்று

ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த விவசாயி மகன், ஐ.இ.எஸ்., தேர்வில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.



latest tamil news



கடந்த ஆண்டு அக்டோபரில் ஐ.இ.எஸ்., எனப்படும் இந்திய பொருளாதார சேவைகள் பிரிவுக்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. அதில் ஜம்மு - காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை விவசாயியின் மகனான தன்வீர் அகமது கான் பங்கேற்று தேர்வு எழுதினார்.தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் தன்வீர், தேசிய அளவில் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.


latest tamil news


ஸ்ரீநகரில் இருந்து 80 கி.மீ., தொலைவில் உள்ள நிகீன்பூரா குந்த் என்ற குக்கிராமத்தில் வசித்து வரும் தன்வீர், அரசு கல்லுாரியில், பி.ஏ., பட்டப்படிப்பு பயின்றார். பின், எம்.ஏ., மற்றும் எம்.பில்., பட்டம் பெற்ற இவர், வறுமையில் வாடும் தன் குடும்பத்திற்கு உதவ, கோல்கட்டாவுக்கு சென்று ரிக்ஷா ஓட்டி வேலை செய்தார். கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின்போது, வீட்டில் இருந்தபடி ஐ.இ.எஸ்., தேர்வுக்காக படித்துள்ளார். ஆறு மாதங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி சிறந்த முறையில் தேர்வு எழுதிய தன்வீர், தற்போது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kudiyanavan - coimbatore ,இந்தியா
02-ஆக-202114:59:45 IST Report Abuse
kudiyanavan வாழ்த்துக்கள். கல்வியே ஒரு மனிதனின் வாழ்வில் வெளிச்சம் தரும். நீங்கள் கல் வீட்சில் ஈடுபடாமல் தீவிரவாதம் பக்கம் திரும்பாமல் கல்வி நோக்கி பார்வையை திருப்பியது நன்று.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
02-ஆக-202113:25:46 IST Report Abuse
Krishnamurthy Venkatesan B.A., M.A., M.PHIL., படிப்புகளை முடித்துவிட்டு ரிக்க்ஷா ஒட்டினாரா? சரியாக படவில்லை. ஜம்முவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பாடம் போதித்திருக்கலாமே?
Rate this:
Cancel
K Sukumar - Nagpur,இந்தியா
02-ஆக-202112:38:49 IST Report Abuse
K Sukumar Congratulations
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X