பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: மூன்றாவது அலையில் சிக்குவோமா?

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆர்.நடராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றின் இரண்டு அலைகளை கடந்து, தற்போது மூன்றாவது அலை எப்படியிருக்குமோ என அச்சத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது தமிழகம்.இரண்டாவது அலையில், மிக அதிகமாக பாதிக்கப்பட்டது, கோவை தான். இதற்கு காரணம்
covid, third, wave, கோவிட், மூன்றாவது, அலை, தமிழக அரசு, நடவடிக்கை


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆர்.நடராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றின் இரண்டு அலைகளை கடந்து, தற்போது மூன்றாவது அலை எப்படியிருக்குமோ என அச்சத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது தமிழகம்.இரண்டாவது அலையில், மிக அதிகமாக பாதிக்கப்பட்டது, கோவை தான். இதற்கு காரணம் அண்டை மாநிலமான கேரளா. அம்மாநிலத்தில் இருந்து தான் நோய் தொற்று மிக அதிகமாக கோவைக்கு பரவியது.தற்போது தமிழகம் நோய் தொற்றிலிருந்து ஓரளவு விடுபட்டு உள்ளது.

ஆனால் சமீபநாட்களாக தொற்று எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. மூன்றாவது அலை மெல்ல துவங்கியுள்ளது.இதுவரை நோய் தொற்று பரவலில், நம் நாட்டில் 50 சதவீத பாதிப்பு கேரளாவில் மட்டும் உள்ளது. அதாவது, நம் நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் பேரில், 25 ஆயிரம் பேர் கேரளாவில் உள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.அண்டை மாநிலத்தில் நோய் பரவல் அதிகமாக இருப்பது குறித்த விஷயத்தில், தமிழக அரசு அலட்சியமாக உள்ளது.


latest tamil news


தமிழகத்தில் நோய் பரவல் கட்டுக்குள் இருக்கும்போது, அண்டை மாநிலங்களில் இருந்து அதை ஏன் வரவழைக்க வேண்டும்?கேரளாவில் இருந்து நோய் பரவினால் முதலில் பாதிக்கப்படுவது, கோவை தான் என்பது அனைவருக்கும் தெரியும்.எனவே, தமிழக - கேரள எல்லை உள்ள இடங்களில் பரிசோதனை சாவடிகள் அமைக்க வேண்டும். கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி, பயணியரை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.தற்போது கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சர்வ சாதாரணமாக தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.இதன் விளைவு, நோய் தொற்றை அதிகரிக்கும்.

மீண்டும் ஊரடங்கு போடப்படும். தமிழக மக்கள் துயரத்தில் சிக்க போகின்றனர்.வரும்முன் காப்போம் என்ற கொள்கையை, தமிழக அரசு ஏன் மறந்தது?கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தினாலே மூன்றாவது அலையை சமாளித்து விடலாம்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
02-ஆக-202123:14:24 IST Report Abuse
Rajagopal அரசியவாதிகளின் கையில் எல்லாம் ஏற்கனவே சிக்கி, கட்டுக்கடங்காமல் எல்லாம் போய்க்கொண்டு இருக்கிறது. வைரஸ் நிர்வாகம் ராணுவத்தை உள்ளே கொண்டுவந்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்து நடத்தினால்தான் இதை சமாளிக்க முடியும்.
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
02-ஆக-202116:19:37 IST Report Abuse
Viswam ஊசி போட்டுகொண்டவர்களுக்கு ப்ரேக்த்ரு இன்பெக்க்ஷன் வருகிறது. அதைவிடக்கொடுமை கொரோனவிலிருந்து குணமடைந்து அதன்பிறகு ஊசி போட்டுகொண்டவர்களுக்கும் இன்பெக்க்ஷன் வருகிறது. எதுவும் நிரந்தர பாதுகாப்பு கிடையாது. தனி ஒருவருக்கு தேவை முகக்கவசம், தூரம் கடை பிடித்தல், கூட்டத்தில் போகாமல் இருப்பது. அலட்சியம் ஆளை பாதிக்கும். அரசு கையை விரிக்கும்
Rate this:
Cancel
02-ஆக-202114:46:29 IST Report Abuse
உண்மை திரு. நடராஜன் அவர்களின் இந்த பதிவு மிகவும் சரியான நேரத்தில் சரியான எச்சரிக்கை மணி. இந்த விஷயத்தில் ஊடகங்கள் மக்களுக்கு எந்தவொரு எச்சரிக்கை செய்தியையும் கொண்டு சேர்ப்பதில் கவனம் எடுத்து கொள்வதில்லை. அவர்களுக்கு சீரியல்கள் மற்றும் விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் மூலம் வர்த்தகம் மட்டுமே குறிக்கோள். ஆனால் ஒவ்வொரு அலையின் போதும் நாளிதழ்கள் கொடுத்த எச்சரிக்கையை அரசுகள் கண்டு கொள்ளாமல் இருந்ததற்கான பலனை அனுபவித்து விட்டோம். இனிமேலாவது விழித்துக் கொண்டு செயல்பட்டால் அரசின் தேவையில்லாத டென்ஷனை குறைக்க உதவும். கல்லூரிகளில் இறுதி ஆண்டு முடித்த கேரள மாநில மாணவ மாணவிகள் விடுதிகள் காலி செய்ய நிறைய வாகனங்கள் மூலம் வருகிறார்கள். அவைகள் முறையாக சோதிக்கப்பட்டு கல்லூரிகளுக்கு வரும் போதும் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை சான்றிதழ் உள்ளதா என சோதனை அவசியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X