பொது செய்தி

இந்தியா

இந்திய சீன படைகள் வாபஸ்?

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி-எல்லையில் இருந்து படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக இந்தியா - சீனா இடையேயான, 12வது சுற்று பேச்சு ஒன்பது மணி நேரம்நடந்தது. படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.கிழக்கு லடாக்கில் கடந்தாண்டு சீன ராணுவம் அத்துமீற முயன்றது. எல்லையில் நம் படைகள் குவிக்கப்பட்டு சீனாவின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

புதுடில்லி-எல்லையில் இருந்து படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக இந்தியா - சீனா இடையேயான, 12வது சுற்று பேச்சு ஒன்பது மணி நேரம்நடந்தது. படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.latest tamil newsகிழக்கு லடாக்கில் கடந்தாண்டு சீன ராணுவம் அத்துமீற முயன்றது. எல்லையில் நம் படைகள் குவிக்கப்பட்டு சீனாவின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. கடந்தாண்டு மே மாதத்தில் இருந்து எல்லையில் இரு நாட்டு படைகளும் முகாமிட்டுள்ளன.பல சுற்று பேச்சுகளுக்குப் பின், சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன. கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதில்எந்த முடிவும் எட்டப்படவில்லை.


latest tamil news
சம்மதம்

இது தொடர்பாக இரு ராணுவ எல்லை படை பிரிவின் தலைவர்கள் இடையேயான, 12வது சுற்று பேச்சு நேற்று முன்தினம் சீனாவின் எல்லைக்குட்பட்ட மோல்டோ பகுதியில் நடந்தது. ஒன்பது மணி நேரத்துக்கு மேல் நடந்த இந்த பேச்சு திருப்திகரமாக இருந்ததாக நம் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. 'கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் இருந்த படைகளை திரும்பப் பெற இருதரப்பும் சம்மதித்துள்ளன.'விரைவில் இது பற்றிய அறிவிப்பை இரு தரப்பும் இணைந்து வெளியிடும்' என, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar TT -  ( Posted via: Dinamalar Android App )
02-ஆக-202110:50:02 IST Report Abuse
Kumar TT இன்று பேச்சுவார்த்தை என்ற சீனாவின் நிலைப்பாட்டுக்கு காரணம் இந்தியா சர்வதேச அளவில் வலுவாக உள்ளது என்பது நிதர்சனம்
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
02-ஆக-202104:58:36 IST Report Abuse
oce நீ எடத்த காலி பண்ணா நானும் காலி பண்ணுவேன். அட போங்கடா. எதற்கும் உதவாது இந்த சோப்ளாங்கி முடிவுக்கு. எத்தனை தடவை சுற்றி சுற்றி வந்து பேசினீங்க.
Rate this:
Cancel
Manoharan Munusamy - Kumbakonam,இந்தியா
02-ஆக-202104:27:00 IST Report Abuse
Manoharan Munusamy மகிழ்ச்சி. பேச்சுவார்த்தை மூலமாக எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும் என்பதற்கான மற்றுமொரு உதாரணம். தேவையற்ற பிரச்சனையை எல்லையில் தொடங்கி அதன் விளைவாக சர்வதேச அளவில் தனது பெயரை பெருமளவில் கெடுத்துக் கொண்டது சீனா. மேலும் மதிப்புமிக்க 40 ராணுவ வீரர்களை இழந்தது. இந்தியா உடனான வணிக உறவும் பாதிக்கப்பட்டது. இந்தியா சீனா உறவு மேம்படுவது இந்தப் பிராந்தியத்தின் அமைதிக்கு முக்கியம். அதற்கு சீனா தனது அகன்ட சீனச் சாம்ராஜ்யக் கனவைக் கைவிடுதல் முக்கியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X