பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் பல்கலைக்கு கருணாநிதி பெயர்?

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (104)
Share
Advertisement
சென்னை---தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்ட, உயர் கல்வி துறையில் ஆலோசனை நடந்து வருகிறது.ஜெயலலிதா பெயரில் மொத்தம் மூன்று பல்கலைகள் உள்ளன. ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலை இல்லை என, முதல்வர் ஸ்டாலினிடம் தி.மு.க., அனுதாபிகள் தெரிவித்துள்ளனர்.எனவே, தற்போதுள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கு, கருணாநிதியின் பெயரை சூட்டலாம்

சென்னை---தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்ட, உயர் கல்வி துறையில் ஆலோசனை நடந்து வருகிறது.



latest tamil news



ஜெயலலிதா பெயரில் மொத்தம் மூன்று பல்கலைகள் உள்ளன. ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலை இல்லை என, முதல்வர் ஸ்டாலினிடம் தி.மு.க., அனுதாபிகள் தெரிவித்துள்ளனர்.எனவே, தற்போதுள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கு, கருணாநிதியின் பெயரை சூட்டலாம் என ஆலோசனை நடந்து வருகிறது. முதற்கட்ட ஆலோசனையில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு கருணாநிதி பெயர் வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.


latest tamil news



இது குறித்து வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், அக்ரி மாதவன் தலைமையில், முதல்வருக்கும், பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி செயலருக்கும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. கோவை வேளாண் பல்கலை, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் பல்கலை அந்தஸ்து பெற்றதால், அதற்கு கருணாநிதியின் பெயர் வைக்க ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, கோவை வேளாண் பல்கலைக்கு கருணாநிதி பெயர் சூட்டும் அறிவிப்பு விரைவில் வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (104)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharmaraj T - Coimbatore ,இந்தியா
03-ஆக-202111:03:22 IST Report Abuse
Dharmaraj T கல்லணை கட்டிய கரிகாலன் பெயர் வைக்கலாம் (தமிழரின் நீர் மேலாண்மை குறித்து குறிப்பிடும் போது, அதில் கல்லணையை குறிப்பிடாமல் இருக்க முடியாது. சர்வதேச அளவில் தமிழரின் நீர் மேலாண்மை அறிவை பறைசாற்றியது கல்லணை.)
Rate this:
Cancel
Truth Triumph - Coimbatore,இந்தியா
02-ஆக-202121:07:40 IST Report Abuse
Truth Triumph அருமையான யோசனை சிறப்பாக செய்திட வேண்டும் .. வாழ்வாங்கு வாழ்வான் ...
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-ஆக-202120:15:48 IST Report Abuse
தமிழவேல் எந்த அரசு நிறுவனமானாலும், திட்டங்களானாலும் இங்கு, எல்லாத்தையுமே தமிழ்நாடு அரசு என்ற பெயரில் அமைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசே மாநில அரசுகளை கட்டாய படுத்தி அந்தந்த மாநில அரசின் பெயரிலேயே செய்ய, சட்டம் ஒன்று இயற்ற வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X