பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் தமிழில் அர்ச்சனை

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (100)
Share
Advertisement
சென்னை--தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று கூறியதாவது:சென்னை திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில், விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, சன்னதி தெருவில் உள்ள இறைச்சி கடைகள் அகற்றப்படும். தமிழகத்தில் உள்ள கோவில்களில், விரைவில்

சென்னை--தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று கூறியதாவது:சென்னை திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில், விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, சன்னதி தெருவில் உள்ள இறைச்சி கடைகள் அகற்றப்படும். தமிழகத்தில் உள்ள கோவில்களில், விரைவில் தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.



latest tamil news



அதற்காக, 47 கோவில்களை தேர்வு செய்து, 'அன்னை தமிழில் அர்ச்சனை' என, விளம்பர பலகைகள் வைக்கப்படும்.அர்ச்சனை செய்பவரின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் தகவல் பலகையில் வெளியிடப்படும்.


latest tamil news



தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோர், அவரை தொடர்பு கொள்ளலாம். முதற்கட்டமாக, வரும் வாரத்தில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், தமிழில் அர்ச்சனை துவங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
03-ஆக-202106:33:32 IST Report Abuse
 rajan கலைஞரே போற்றி, கலைஞர் மகனே போற்றி, கலைஞர் பேரன் போற்றி, அன்னாவே போற்றி, பெரியாரே போற்றி, வீரமணியே போற்றி, சுப வீரனே போந்தி, சேகர் பாபுவே போற்றி, சன் குழுமமே போற்றி...... அர்ச்சன முடிந்தது.... தட்டுல துட்ட போடுங்க.... உண்டியல்ல ேபாடாதிங்க.... வாழ்க தமிழ்..... ஒழிக சமஸ்கிருதம்.....
Rate this:
Cancel
N.G.RAMAN - MADURAI,இந்தியா
02-ஆக-202122:18:38 IST Report Abuse
N.G.RAMAN தமிழும் சமஸ்கிருதமும் இந்திய ஆன்மீகத்தின் இரண்டு கண்கள். ஒன்று ஓசைகள் மூலம் இறைவனை துதிக்கும் வழிபாட்டுக்கான இயற்கை மொழி . மற்றொன்று மதுர மொழி என்றழைக்கப்பட்ட மனித மொழி. தமிழை காட்டுமிராண்டி மொழி என்றழைத்த ஒரு கூட்டம் , ஆங்கிலமே உயர்ந்த மொழி என்று அலைந்த ஒரு அடிமை கூட்டம் தமிழின் பெருமை சிறப்புகளை உ வே சா , பரிதிமாற்கலைஞர் போன்றோர் நிரூபித்த பின் வேறு வழியின்றி தமிழ் மொழியை தூற்றுவதை நிறுத்தி விட்டு தனது பிழைப்புக்காக தமிழ் மொழியை இன்று பயன்படுத்தி வருகிறது. இறை நம்பிக்கை இல்லாத கூட்டத்துக்கு இறைவனை யார் எந்த மொழியில் துதித்தால் என்ன கவலை ? தமிழர்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்துவது மட்டுமே ஆங்கிலேய அடிமைகளின் முதல் பணியாக இருக்கிறது. ஆலயங்களின் ஆன்மிக அறிவியலை புரிந்த கொள்ளாத பிறவிகள்.
Rate this:
Cancel
Dharma - Madurai,இந்தியா
02-ஆக-202121:22:18 IST Report Abuse
Dharma சர்ச்சில் கிருப கிருப கிருப என்று சொல்வது தமிழா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X