பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' வழிகாட்டி 2.0 நிறைவு!

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021
Share
Advertisement
'தினமலர்' நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கிய, இரண்டாம் கட்ட 'ஆன்லைன்' வழிகாட்டி நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.ஜூலை, 31ம் தேதி துவங்கிய நிலையில், முதல் நாள் நிகழ்ச்சியில், கோர் இன்ஜினியரிங் படிப்புகள் குறித்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் ரமேஷ், தொழில்

'தினமலர்' நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கிய, இரண்டாம் கட்ட 'ஆன்லைன்' வழிகாட்டி நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.



latest tamil news



ஜூலை, 31ம் தேதி துவங்கிய நிலையில், முதல் நாள் நிகழ்ச்சியில், கோர் இன்ஜினியரிங் படிப்புகள் குறித்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் ரமேஷ், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் குறித்து நிபுணர் முகமது யூசுப், தொழில் முனைவோருக்கு தேவையான திறன்கள் குறித்து, 'கிஷ்புளோ' நிறுவனத்தின் சி.இ.ஓ., சுரேஷ் சம்பந்தம் பேசினர்.


latest tamil news


தொடர்ந்து நேற்று நடந்த இறுதி நாள் நிகழ்ச்சியில், பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'கட் -ஆப்' குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி விளக்கம் அளித்தார். கல்லுாரியை தேர்வு செய்யும் முன், கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் வாய்ப்புகள் குறித்து, 'ஒர்க்போர்ஸ் மேனேஜ்மென்ட்' இயக்குனர் சுப்ரமணி ராமகிருஷ்ணன் ஆலோசனை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில், கல்வியாளர்கள் பேசிய வீடியோக்களின் தொகுப்புகளை, kalvimalar.com என்ற கல்விமலர் இணையதளத்தில், மாணவர்கள் பார்க்கலாம்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X