பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் 10,859 பேர் கைநாட்டுக்கு 'குட் பை'

Added : ஆக 02, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் 10,859 பேர் கைநாட்டில் (கைரேகை பதிவு) இருந்து கையெழுத்திட கற்றுக்கொண்டனர். மாவட்டத்தில் கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பில் 15 வயதுக்கு மேற்பட்ட படிக்க தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்கும் திட் டத்தில் 545 மையங்களில் பயிற்சி அளிக்கப் பட்டது. கல்வித்துறை சார்பில் ஜூலை 29 -முதல் 31 வரை மதிப்பீடு பணிகள்

மதுரை : மதுரையில் பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் 10,859 பேர் கைநாட்டில் (கைரேகை பதிவு) இருந்து கையெழுத்திட கற்றுக்கொண்டனர்.

மாவட்டத்தில் கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பில் 15 வயதுக்கு மேற்பட்ட படிக்க தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்கும் திட் டத்தில் 545 மையங்களில் பயிற்சி அளிக்கப் பட்டது. கல்வித்துறை சார்பில் ஜூலை 29 -முதல் 31 வரை மதிப்பீடு பணிகள் மேற்கொள்ளப் பட்டது. அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் வாசித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது. குறைந்த பட்சம் அவர்கள் கைரேகை பதிவு செய்வதற்கு பதில் கையெழுத்து போடக் கற்றுக் கொண்டுள்ளனர்.

சி.இ.ஓ., சுவாமிநாதன் கூறுகையில், “குறைந்தபட்சம் வாசித்தல், எழுதுதல், எண்ணறிதல் 150 மதிப்பெண்ணிற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 49.5 மதிப்பெண் பெற்றால் அவர்களுக்கு கற்றல் அடைத்தல் சான்று அளிக்கப்படும். பயிற்சி முடித்தோர் கையெழுத்திட கற்றுக்கொண்டனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X