பொது செய்தி

தமிழ்நாடு

இன்று தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா: சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பு

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
சென்னை-தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் திறப்பு விழாவும் இன்று நடக்கிறது. சட்டசபையில் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.ஏற்பாடுசட்டசபை நுாற்றாண்டு விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் திறப்பு விழா, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை மண்டபத்தில் இன்று மாலை

சென்னை-தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் திறப்பு விழாவும் இன்று நடக்கிறது. சட்டசபையில் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.latest tamil newsஏற்பாடுசட்டசபை நுாற்றாண்டு விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் திறப்பு விழா, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை மண்டபத்தில் இன்று மாலை நடக்கிறது.இதில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டில்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு, இன்று பகல் 12:45 மணிக்கு, சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கிண்டியில் உள்ள ராஜ்பவன் சென்று தங்குகிறார். அங்கேயே மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


மாலை 5:00 மணிக்கு, சட்டசபை மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். சபாநாயகர் அப்பாவு வரவேற்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தஉள்ளார். முன்னதாக, முதல்வர் ஸ்டாலின், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசுகின்றனர்.நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.பி.,க்கள், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.


latest tamil news


விழா, ஒரு மணி நேரம் நடக்க உள்ளது. விழா முடிந்ததும், மீண்டும் ராஜ்பவன் செல்லும் ஜனாதிபதி, இரவு அங்கு தங்குகிறார். நாளை காலை, சென்னையில் இருந்து கோவை வழியாக ஊட்டிக்கு செல்கிறார். நுாற்றாண்டு விழாவை ஒட்டி, சட்டசபை மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. தலைமைச் செயலக நுழைவாயில் மற்றும் வெளியேறும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.வாழை மரங்கள், தென்னை ஓலை அலங்காரம், மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வருகையை ஒட்டி, சென்னையில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. தலைமைச் செயலக வளாகம், கமாண்டோ படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இன்று பணிக்கு வரும் தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஆக-202119:27:11 IST Report Abuse
அப்புசாமி ஜனாதிபதிக்கும் வூட்டில் இருந்து போரடிக்காதா? அதான் கெளம்பிட்டாரு. 7000 போலூஸ் பாதுகாப்போட எளிமையா வர்ராரு. வெட்டிச் செலவெல்லாம் புடிக்காது அவருக்கு.
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
02-ஆக-202119:00:17 IST Report Abuse
Poongavoor Raghupathy தமிழ்நாடு சட்ட சபை ராஜாஜி வெங்கட்ராமன் கக்கன் காமராஜர் அவர்கள் இருந்தபோது இந்தியாவிலேயே முதன்மையான ஆக்கபூர்வமான சட்ட சபயாக இருந்தது உண்மைதான். கருணாநிதி ஜெயலலிதா வந்த பிறகு மஹாமட்டமான இடமாக மாறியது அறுபது வயதை கடந்தவர்களுக்குத்தான் தெரியும். பாவம் இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை , நூறு வருட தமிழ்நாடு சட்ட சபாவில் காமராஜர் படம் திறப்பு தான் சரியாக இருக்க முடியும். ஸ்டாலின் ஆட்சியில் இருப்பதால் அப்பாவை தூக்கி பிடிக்கிறார். ஆனாலும் காமராஜர்தான் தகுதியானவர் நூறு ஆண்டஆன சட்ட சபைக்கு. ரூபா அறுபத்திநாலு உடன் இறந்த தியாக செம்மல் காமராஜர். தற்சமயம் காமராஜர் மாதிரியான தலைமை தமிழ்நாட்டுக்கு மிக அவசியம். நல்லவர்கள் அரசியல் சாக்கடைக்குள் வர வெறுக்கிறார்கள் என்னதான் வழி தமிழ்நாடு முன்னேற தெரியவில்லை/
Rate this:
Cancel
Tamilan - Kongu Nadu,இந்தியா
02-ஆக-202117:22:12 IST Report Abuse
Tamilan ஊழல் .....இது தேவையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X