இன்று தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா: சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா: சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பு

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (33)
Share
சென்னை-தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் திறப்பு விழாவும் இன்று நடக்கிறது. சட்டசபையில் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.ஏற்பாடுசட்டசபை நுாற்றாண்டு விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் திறப்பு விழா, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை மண்டபத்தில் இன்று மாலை

சென்னை-தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் திறப்பு விழாவும் இன்று நடக்கிறது. சட்டசபையில் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.



latest tamil news



ஏற்பாடுசட்டசபை நுாற்றாண்டு விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் திறப்பு விழா, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை மண்டபத்தில் இன்று மாலை நடக்கிறது.இதில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டில்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு, இன்று பகல் 12:45 மணிக்கு, சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கிண்டியில் உள்ள ராஜ்பவன் சென்று தங்குகிறார். அங்கேயே மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


மாலை 5:00 மணிக்கு, சட்டசபை மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். சபாநாயகர் அப்பாவு வரவேற்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தஉள்ளார். முன்னதாக, முதல்வர் ஸ்டாலின், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசுகின்றனர்.நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.பி.,க்கள், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.


latest tamil news


விழா, ஒரு மணி நேரம் நடக்க உள்ளது. விழா முடிந்ததும், மீண்டும் ராஜ்பவன் செல்லும் ஜனாதிபதி, இரவு அங்கு தங்குகிறார். நாளை காலை, சென்னையில் இருந்து கோவை வழியாக ஊட்டிக்கு செல்கிறார். நுாற்றாண்டு விழாவை ஒட்டி, சட்டசபை மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. தலைமைச் செயலக நுழைவாயில் மற்றும் வெளியேறும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.வாழை மரங்கள், தென்னை ஓலை அலங்காரம், மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வருகையை ஒட்டி, சென்னையில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. தலைமைச் செயலக வளாகம், கமாண்டோ படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இன்று பணிக்கு வரும் தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X