பொது செய்தி

தமிழ்நாடு

வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியது: தமிழக அரசு

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது. இவற்றில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே, 56 லட்சத்து, 31 ஆயிரத்து, 565 என்று அரசு புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்தபடி உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 14 சதவீதம் வரை வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. கொரோனா தாக்கத்தின்போது

சென்னை: தமிழகத்தில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது. இவற்றில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே, 56 லட்சத்து, 31 ஆயிரத்து, 565 என்று அரசு புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.



latest tamil news


தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்தபடி உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 14 சதவீதம் வரை வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. கொரோனா தாக்கத்தின்போது வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அரசுப் போக்குவரத்துத் துறை பதிவேடுகளின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடியே, 3 லட்சத்து, 31 ஆயிரத்து, 969 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், கல்லூரி, பள்ளி வாகனங்கள், பல வகையான லாரிகள் என 13 லட்சத்து, 10 ஆயிரத்து, 317 போக்குவரத்து வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே, 56 லட்சத்து, 31 ஆயிரத்து, 565. மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் இது சுமார் 85 சதவீதமாகும். கொரோனா பாதிப்பு காலத்தில் ரயில், பேருந்துகளில் மக்கள் பயணிப்பதை தவிர்த்தாலும், கார், இருசக்கர வாகனங்கள் போன்ற சொந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் சொந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சத்தால் மக்கள் பொதுப் போக்குவரத்து வசதியை தவிர்த்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புதிய வாகனங்களின் எண்ணிக்கை 3 முதல் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும், நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இதுதவிர, சாலைகளை விரிவுபடுத்துதல், முக்கியமான இடங்களில் மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, மத்திய அரசு பழைய வாகனங்கள் அழிப்புக் கொள்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 20 ஆண்டுகளைக் கடந்த சொந்த வாகனங்களையும், 15 ஆண்டுகளைக் கடந்த போக்குவரத்து வாகனங்களையும் நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும்போது பழைய வாகனங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம்தான், மாசு குறைபாட்டை சரிசெய்ய முடியும். உதிரி பாகங்களின் விலை குறையும். புதிய வாகனங்களின் உற்பத்தி பெருகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


latest tamil news



இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "புதிய தொழிற்சாலைகள் திறப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு உள்ளிட்டவைகளால் வாகனப் பெருக்கம் தவிர்க்க முடியாதது. ஆனாலும், சில கட்டுபாடுகள் மூலம் தனியார் வாகனப் பெருக்கத்தை குறைக்கலாம். வெளிநாடுகளைப்போல, மக்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்ல பல்வேறு வகையான பொதுப் போக்குவரத்து வசதியை உருவாக்க வேண்டும். அதேபோல, விரைவாக செல்ல தனி பாதை ஒதுக்கீடு, பேருந்துகளுக்கு தனி சாலை போன்றவற்றை செயல்படுத்தலாம். மேலும், டில்லியில் கார் போன்ற சொந்த வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப்போல, சென்னை போன்ற மாநகரங்களிலும் கட்டுப்பாடுகளை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்," என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
02-ஆக-202123:44:19 IST Report Abuse
மலரின் மகள் ஒவ்வொரு குடும்பத்திரும் இரண்டு வாகநங்கள் போல. ஒரு குடும்பம் ஒருவாரிசு என்று குடும்பத்திற்கு மட்டும் கட்டுப்பாடு. நச்சு வாயுக்கள் எவ்வளவு வெளியேறும். தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் மட்டுமே காற்றின் மாசம். அன்று வாகனங்கள் இல்லை ஆகையால் பட்டாசுகள் புகை சரியாத்தான் இருக்கும். வழக்கம் போலத்தான் மாசு அன்றும். சிவகாசி தொழிலாளிகள் மெம்பருவதர்ஹற்காக அரசு ஹெல்மெட் விஷயம் போல தீபாவளி பட்ட்டாசு விஷயத்தையும் மேம்போக்காக விட்டு விடலாம் என்று என்ன தோன்றுகிறதல்லவா?
Rate this:
Cancel
nizamudin - trichy,இந்தியா
02-ஆக-202122:18:09 IST Report Abuse
nizamudin வாகன உற்பத்தி 2 வருடத்து கு நிறுத்தி வையுங்கள் ஒரு வீட்டில் 2 வாகனங்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று தடை விதையுங்கள் ?
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
02-ஆக-202115:38:30 IST Report Abuse
S.kausalya தமிழ்நாட்டில் கிராமத்தில் சாதாரண குடிசை வீட்டில் கூட ஒரு வீட்டுக்கு ,இரண்டு டூ wheelerai பார் க்காலாம். ஆனால் மற்ற மாநிலங்களில் சிறிய டவுனில் கூட டூ வீலர் வைத்து இருப்போர் மிகவும் குறைவு. கிராமத்தில் அங்கு ஒன்றும், இங்கு ஒன்று என தான் பார்க்கலாம். சைக்கிளின் உபயோகம் மிக அதிகம் அங்கே. ஆனால் தமிழ் நாட்டில். தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் புதுப்புது மாடல்களில் வண்டிகள் வாங்கப்படுகிறது. ஏழைகள் என மானியம் ,இலவச அரிசி வாங்குபவர்கள் வீட்டில் கூட டூ wheelergalai எளிதாக பார்க்கலாம். சாப்பாட்டுக்கு கஷ்டப்படுபவர்கள் வீட்டில் கூட இதை பார்க்கலாம். அரசு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் cycle கூட உபயோக படுத்த படுவதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X