அமெரிக்காவில் கொரோனா நிலை; ஆண்டனி பவுசி எச்சரிக்கை

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க நோய்தடுப்பு நிபுணர் ஆண்டனி பவுசி சமீபத்தில் ஏபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமெரிக்காவில் கொரோனா தாக்கம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவில் தற்போது பல்வேறு தடுப்பு மருந்துகள் 50 மாகாணங்களில் உள்ள குடிமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவின்

வாஷிங்டன்: அமெரிக்க நோய்தடுப்பு நிபுணர் ஆண்டனி பவுசி சமீபத்தில் ஏபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமெரிக்காவில் கொரோனா தாக்கம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.latest tamil news


அமெரிக்காவில் தற்போது பல்வேறு தடுப்பு மருந்துகள் 50 மாகாணங்களில் உள்ள குடிமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவின் பல ரகங்கள் அமெரிக்காவில் உலவி வந்தாலும் அமெரிக்கா தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவே வெளி உலகம் நினைக்கிறது. ஆனால் ஆண்டனி வைரஸ் தாக்கம் குறித்து தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய ஆண்டனி சில வலிகளும் கடினமான தருணங்களும் இன்னும் நீங்கவில்லை என்று கூறினார். கிட்டத்தட்ட அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவிட்ட நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஆண்டு குளிர்காலத்தில் சந்தித்ததுபோல மிக மோசமான நிலையை அமெரிக்கா மீண்டும் சந்திக்காது என நம்புகிறேன். இனிவரும் காலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அவ்வளவாக இருக்காது. இரு டேஸ் தடுப்புமருந்து இன்னும் முழுமையாக செலுத்தப்படாத அமெரிக்க குடிமக்களால் வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் இருக்கும் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.


latest tamil news


கடந்த 7 நாட்களில் சராசரியாக வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. தடுப்பு மருந்தை முழுவதுமாக செலுத்திக்கொண்டவர்களைப் பற்றி கவலையில்லை. ஆனால் தடுப்பு மருந்து செலுத்தாதவர்கள் இன்னும் அபாய கட்டத்திலேயே உள்ளனர்.
எந்த ஒரு தடுப்பு மருந்தும் 100 சதவீத பலன் அளிக்கும் என்று கூற முடியாது. பல அமெரிக்க குடிமக்களுக்கு அறிகுறி இல்லாத வைரஸ் தாக்கம் உடலில் இருந்து வருகிறது. இது அபாயகரமானது. இதனால் மரணங்கள் அதிகரிக்கலாம்.இவ்வாறு ஆண்டனி பவுசி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
02-ஆக-202120:41:16 IST Report Abuse
Ramesh Sargam The highly contagious Delta variant is now responsible for almost all new Covid-19 cases in the US. In counties where vaccination rates are low, cases are rising fast, and deaths are also on the rise.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
02-ஆக-202113:30:46 IST Report Abuse
Ramesh Sargam இந்த பவுசி, ட்ரம்ப் இருந்த காலகட்டத்தில் எப்பொழுதும் மாஸ்க் அணிந்திருப்பார். இப்பொழுது பாருங்கள், இவ்வளவு'சொற்பொழிவு' ஆற்றும் இவரே மாஸ்க் அணிவதில்லை. அமெரிக்கர்களுக்கு சாதாரணமாக கட்டுப்பாடு விதித்தால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கேட்டால், 'என்னுடைய privacy -இல் தலையிடாதே' என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள். ஆக, அவர்களுக்கே அவர்கள் மீது ஒரு அக்கறை ஏற்பட்டு, கட்டுப்பாடுகளை பின்பற்றினால், இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து சீக்கிரத்தில் அமெரிக்கா விடுதலை பெரும்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
02-ஆக-202112:35:13 IST Report Abuse
S.Baliah Seer இன்னும் எத்தனை வருடங்கள் இந்த கொரோனா பற்றி பேசிக்கொண்டிருப்பீர்கள்? அடிப்படையில் நான் ஒரு டெக்கனிகல் மேன் .அந்த அனுபவத்தில் ஒன்றை சொல்கிறேன் .இயற்கையாய் ஏற்படும் பழுதுகளை சுலபமாக சரிசெய்து விடலாம். ஆனால் சிலர் வேண்டுமென்றே மெஷினரிகளில் பழுதை உண்டாக்குவார்கள். அவற்றை சரி செய்வது கடினம் மட்டும் அல்ல,அதை நீண்ட நாட்கள் இயக்குவதும் கடினம். அதுபோல சீனாவை பல நாடுகள் தம் சுய லாபத்திற்கு உபயோகப் படுத்திக்க கொண்டிருக்கின்றன என்பதே உண்மை.அதனால்தான் ஒரு நாடும் சீனாவைக் கண்டிக்கவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X