தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் கடனை எல்லாம் அடைச்சுடுவீங்களா...

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
பத்து ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எங்கும் ஊழல் நிறைந்து இருக்கிறது. 5.76 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துச் சென்றுள்ளனர். இன்று அந்த கடனுக்கு வட்டி கட்டுவது யார்? கஜானாவை சுரண்டி நிர்மூலமான ஆட்சி செய்து விட்டு, இன்று போராட்டம் செய்கின்றனர்.- போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் கடனை எல்லாம் அடைச்சுடுவீங்களா... இல்லை கடனே வாங்க
தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் கடனை எல்லாம் அடைச்சுடுவீங்களா...

பத்து ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எங்கும் ஊழல் நிறைந்து இருக்கிறது. 5.76 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துச் சென்றுள்ளனர். இன்று அந்த கடனுக்கு வட்டி கட்டுவது யார்? கஜானாவை சுரண்டி நிர்மூலமான ஆட்சி செய்து விட்டு, இன்று போராட்டம் செய்கின்றனர்.
- போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்


தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் கடனை எல்லாம் அடைச்சுடுவீங்களா... இல்லை கடனே வாங்க மாட்டீங்களா... இரண்டு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என சொல்ல தோன்றும் வகையில், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு.



தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் நெருக்கடி என்ற நிலை இல்லாத அளவுக்கு நிதிநிலை நன்றாகவே உள்ளது
- ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்


நீங்க ஒண்ணு சொல்லுறீங்க... போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வேறொண்ணு சொல்லுறாரு... நீங்க எல்லாரும் பொறுமையாக உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க... என சொல்ல தோன்றும் வகையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேட்டி.



திருமாவளவன் கட்சிக்கு, தி.மு.க.,வில் மரியாதை இல்லை. பா.ஜ.,வில் பட்டியலினத்தவர் மாநில தலைவராக, மத்திய அமைச்சராகிறார். இதை புரிந்து கொண்டால், திருமாவளவன் பா.ஜ.,வை ஆதரிப்பார்.
- பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் இப்ராஹிம்


சமூக நீதி என்பது தி.மு.க.,வுல இல்லைன்னு திருமாவளவனுக்கு தெரியும்... இருந்தாலும் 'தோழமை சுட்டுதல்' படி தான் அவர் அடங்கியே இருப்பார்... என சொல்ல தோன்றும் வகையில், பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் இப்ராஹிம் பேச்சு.



தேசிய நலனுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், 'பெகாசஸ்' ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என கேட்கிறோம். ஆனால் மத்திய அரசு கேட்கவில்லை. அதனால் பார்லி., போராட்டம் நடத்துகிறோம்.
- தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு


latest tamil news




'பெகாசஸ்' ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து மத்திய அரசு சார்பாக யாராவது விளக்கம் கொடுங்க பா... பார்லிமென்ட் சுமுகமாக நடக்கணும்... என சொல்ல தோன்றும் வகையில், தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேட்டி.



குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார்.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்


முதல்வருக்கும், அமைச்சருக்கும், சினிமா பார்க்குற பழக்கம் இல்லையா... அதுல நடிக்கிற குழந்தைகள் எல்லாம் தொழிலாளர்கள் இல்லையா... என நறுக்கென கேட்க தோன்றும் வகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேட்டி.



மருத்துவ கல்வியில், அகில இந்திய தொகுப்பில் உள்ள இடங்களில், ஓ.பி.சி., பிரிவினருக்கு, 27 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருப்பது அ.தி.மு.க.,வின் சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.
- அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி


குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். இந்த விஷயத்துக்கு இன்னும் எத்தனை பேர் சொந்தம் கொண்டாடி பெருமை பீற்றிக்கொள்வீர் என கேட்க தோன்றும் வகையில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகியோரின் அறிக்கை.

Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
03-ஆக-202105:04:23 IST Report Abuse
Charles திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தமிழக கடனுக்கு பொறுப்பாளிகள். லஜ்ஜம் இல்லாமல், ஊழல்கள் இல்லாமல் 5 வருஷம் இருந்தால் கடன்கள் அடைபட்டுபோகும். அதற்கு மக்களும், திமுகவும் ஒத்துழைத்தால் நடக்கலாம்..
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
02-ஆக-202121:37:48 IST Report Abuse
BASKAR TETCHANA இது போல் கருணாநிதி அவன் அப்பன் போன்றவர்களுக்கு விழா எடுத்து கொண்டு இருந்தால் அதுவும் கோடிக்கணக்கில் செலவு செய்து எப்படி கடன் தீரும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
02-ஆக-202121:21:22 IST Report Abuse
Ramesh Sargam ஆம், சொந்த கடன் ஏதாவது இருந்தால் அடைத்துவிடுவார்கள். தமிழ் நாட்டின் கடனை அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X