பொது செய்தி

இந்தியா

நடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் கோவிட் 3வது அலை தொடங்க வாய்ப்புள்ளது. தினமும் ஒரு லட்சம் பேருக்கு குறையாமல் பாதிக்கப்படுவர்; அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை பாதிக்கப்படலாம்' என, ஐஐடி வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.ஐதராபாத் ஐஐடி ஆய்வாளர்கள் மதுகுமளி வித்யாசாகர், கான்பூர் ஐஐடி ஆய்வாளர் மனிந்திரா அகர்வால் இருவரும் கணித முறை அடிப்படையில், கோவிட் 3வது

புதுடில்லி: இந்தியாவில் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் கோவிட் 3வது அலை தொடங்க வாய்ப்புள்ளது. தினமும் ஒரு லட்சம் பேருக்கு குறையாமல் பாதிக்கப்படுவர்; அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை பாதிக்கப்படலாம்' என, ஐஐடி வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.



latest tamil news



ஐதராபாத் ஐஐடி ஆய்வாளர்கள் மதுகுமளி வித்யாசாகர், கான்பூர் ஐஐடி ஆய்வாளர் மனிந்திரா அகர்வால் இருவரும் கணித முறை அடிப்படையில், கோவிட் 3வது அலையை கணித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வாளர் மதுகுமளி வித்யாசாகர் கூறுகையில், 'கேரளா, மஹாராஷ்டிராவில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, 3வது அலை நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அவ்வாறு ஏற்பட்டால் அக்டோபரில் உச்சத்தை அடையும். ஆனால், 2வது அலையைப் போல், 3வது அலையில் பாதிப்பு, உயிரிழப்பு இருக்காது. 2வது அலையில் தினமும் அதிகபட்சமாக 4 லட்சம் வரை பாதிக்கப்பட்டனர். ஆனால், 3வது அலையில் ஒரு லட்சம் முதல் அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை பாதிக்கப்படலாம்' என்றார்.


latest tamil news



கோவிட் 2வது அலை ஏற்படுவது குறித்து, இந்த இரு ஆய்வாளர்களும் கணித ரீதியிலான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் குறிப்பிட்டது போல் 2வது அலையின் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
02-ஆக-202121:35:44 IST Report Abuse
oce மருத்துவர் உடலுக்குள் இருக்கும் பிரச்சனைகளுக்குத் தான் சிகிச்சை தரமுடியும்மனிதனுக்கு வரும் வியாதியை உடலை பாதிக்கு முன்னர் அவர் கணித்து சிகிச்சை தர முடியாது.குரோனா பாதிக்கப் பட்டவர்களை மருத்துவ மனைகளில் அட்மிட் செய்யுமுன் அவர்களை திறந்த வெளியில் அமர்த்தி டிஏம்எஸ் சீர்காழி போன்றோரின் உரத்த குரலில் பாடும் பாடல்களை ஒருமணி நேரம் கேட்க வைத்து அந்த பாடல் ஒலிகளில் குரோனா பாதிப்பு குறைந்ததா அல்லது அதிகமாகியதா என்பதை கண்டறிந்து பின் பெட்டில் சேர்க்கலாம். ஒலிக்கு வானை தூய்மை படுத்தும் ஆற்றல் உண்டு. உடுக்கை மேளதாள வாத்தியங்கள் வாண வேடிக்கைகள் ஆகியவற்றில் எழும் ஒலி வான்பரப்பில் கலந்து கேட்பவரை மகிழ்விக்கும் சக்தி உள்ள போது‌ அதே சக்தி குரோனாவையும் விரட்டும்.
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
02-ஆக-202119:43:25 IST Report Abuse
Poongavoor Raghupathy டாக்டர்ஸ் எல்லாம் இதுவரை சரியாக கணிக்க முடியாத கொரோனவை கணித முறைப்படி ஆராய்வது சரியாகாது என்று தான் தோன்றுகிறது. இதற்கு ஜோஸ்யமே தேவலைபோலே இருக்கிறது. கொரோனாவில் இதுவரை ஊரடங்கு தான் காரோண கட்டுப்பட உதவி உள்ளது. ஊரடங்கை முறையாக பின்பற்றினால் கொரோனவை கட்டுக்குள் கொண்டுவர முடியும். தடுப்பு ஊசி எந்தவஹையில் உதவும் என்பது தடுப்பு ஊசி பெரும்பாலோருக்கு போட்ட பிறகு தான் தெரியவரும். ஊரடங்கை முறையாக செய்து தடுப்பு ஊசியை அதிக பேருக்கு செலுத்தின பிறகு தான் கொரோனாவின் தீவிரம் அலைகள் தெரியவரும்.
Rate this:
Cancel
02-ஆக-202119:21:09 IST Report Abuse
அப்புசாமி நிஜமா சொல்லுங்க... இரண்டாம் அலையில் வெறும் 4 லட்சம் பேர்களா செத்தாங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X