பொது செய்தி

இந்தியா

பெட்ரோல் பயன்பாடு; பெருந்தொற்றுக்கு முன் இருந்ததுபோல் அதிகரிப்பு

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பெருந்தொற்றுக்கு முன் இருந்தது போல், கடந்த மாதம் பெட்ரோல் பயன்பாடு அதிகரித்துள்ளதாக இந்திய எண்ணெய் கழக தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது: இந்தியாவில் கோவிட் பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு வாகன போக்குவரத்து குறைந்ததையடுத்து, இந்தியாவின் எரிபொருள்

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பெருந்தொற்றுக்கு முன் இருந்தது போல், கடந்த மாதம் பெட்ரோல் பயன்பாடு அதிகரித்துள்ளதாக இந்திய எண்ணெய் கழக தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா தெரிவித்துள்ளார்.



latest tamil news



இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது: இந்தியாவில் கோவிட் பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு வாகன போக்குவரத்து குறைந்ததையடுத்து, இந்தியாவின் எரிபொருள் தேவை, நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பீப்பாய் அளவுக்கு குறைந்தது. ஊரடங்கு தளர்வுகளால் கடந்த மார்ச் மாதம், பெட்ரோல் பயன்பாடு, கோவிட் தொற்றுக்கு முன் இருந்த இயல்புநிலையை நெருங்கியது. ஆனால், 2வது அலையால் கடந்த மே மாதமே மீண்டும் எரிபொருள் பயன்பாடு குறைந்தது.


latest tamil news



இந்நிலையில் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், ஜூன் மாதம் எரிபொருள் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த ஜூலை மாதம் பெட்ரோல் பயன்பாடு மேலும் அதிகரித்தது. மொத்தம் 23 லட்சத்து 70 ஆயிரம் டன் பெட்ரோல் உபயோகிக்கப்பட்டது. இது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகம். தொற்றுக்கு முன், கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 23 லட்சத்து 90 லட்சம் டன் பெட்ரோல் விற்பனை ஆகியிருந்தது. அதே நிலையை தற்போது எட்டியுள்ளது.



latest tamil news



கடந்த மாதம் 54 லட்சத்து 59 ஆயிரம் டன் டீசல் விற்பனை ஆகியுள்ளது. இது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.36 சதவீதம் அதிகம். தீபாவளிக்குள் டீசல் விற்பனையும் தொற்றுக்கு முன்பிருந்த நிலையை எட்டும். விமானங்களும் முழுமையாக இயக்கப்படாததால், விமான எரிபொருள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், சமையல் எரிவாயு பயன்பாடு, ஊரடங்கு காலத்திலும் அதிகரித்தே வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஆக-202105:25:03 IST Report Abuse
அப்புசாமி பெட்ரோல் விக்கிற விலையில் அப்பிடி வண்டி வண்டியா பெட்ரோலை நிரப்பிக்கிட்டு எங்கேய்யா போறாங்க? ஓ எல்லோருக்கும் ஸ்வுக்கி, சொமாட்டோவில் வேலை கிடைச்சு நடமாடும் சர்வர் வேலைக்கு போறாங்களோ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
02-ஆக-202113:23:27 IST Report Abuse
Ramesh Sargam பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்னதான் தினம் தினம் ஏறிக்கொண்டு போனாலும், மக்கள் DON'T CARE. ஒரு சமயத்தில் நானே கூறினேன், பெட்ரோல் விலை ரூ.நூறை கடந்தால், நான் வண்டி ஓட்டுவதையே விட்டுவிடுவேன் என்று. ஆனால் விட முடியவில்லை. ஏன் என்றால் வாகனத்தின் தேவை அவ்வளவு இருக்கிறது. இதை (மக்களின் மனநிலை) மனதில் கொண்டுதான், அரசும் விலையை ஏற்றிக்கொண்டு போகிறது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
02-ஆக-202113:15:00 IST Report Abuse
RajanRajan ஆனாலும் இங்கத்த தமிழக ஊராட்சி ஒன்றிய அரசுக்கு ஆட்டைய போடுற அளவுக்கு கஜானா ஸ்ட்ராங் இல்லேன்னு ஒரே புலம்பல் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X