அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை வரலாற்றை மாற்றி அமைக்கும் திமுக: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (61)
Share
Advertisement
சென்னை: சட்டசபை வரலாற்றை திமுக மாற்றி அமைத்து விழா கொண்டாடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத் திறப்பு விழா, இன்று (ஆக., 2) மாலை 5:00 மணிக்கு நடக்க உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கருணாநிதி படத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில்,
ADMK, Jayakumar, TNAssembly, DMK, திமுக, அதிமுக, ஜெயக்குமார், சட்டசபை

சென்னை: சட்டசபை வரலாற்றை திமுக மாற்றி அமைத்து விழா கொண்டாடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத் திறப்பு விழா, இன்று (ஆக., 2) மாலை 5:00 மணிக்கு நடக்க உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கருணாநிதி படத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், கட்சி தலைவர்கள் என, 350க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
சட்டசபையில் நடக்கும் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்கிறது. சட்டசபை வரலாற்றை திமுக மாற்றி அமைத்து விழா கொண்டாடுகிறது. சட்டசபையில் ஜெயலலிதாவின் படத் திறப்பு விழாவை திமுக.,வினர் புறக்கணித்தனர். அப்படி இருக்கும்போது கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு நாங்கள் எப்படி வரமுடியும்?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
03-ஆக-202104:25:24 IST Report Abuse
meenakshisundaram சட்ட சபையில் முக வின் படத்திறப்பு வேடிக்கையாக இருக்கு .ரெண்டு சபாநாயகர்கள ஒருத்தர் மடியில் இன்னொருத்தரை உட்கார வச்சு டிராமா போட்டது .பெண்ணான ஜே யை ஆடையை தொட்டு அலங்கோலப்படுத்தியது முக் வின் ஆட்சி இதுக்கு யாரேனும் கொண்டாட்டமா ?
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
03-ஆக-202103:46:32 IST Report Abuse
Ram அம்மா குற்றவாளி என்று நிரூபிக்க பட்டதால் தி மு க புறக்கணித்தது காலப்போக்கில் மக்கள் உங்கள் கட்சியையும் புறக்கணித்து விட்டார்கள்.. நீங்கள் மெயின் ரோட்டில உங்க வேலைய கவனிங்க
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
03-ஆக-202101:34:31 IST Report Abuse
LAX குற்றம் நிரூபிக்கப்படாததாலேயே ஒருவர் குற்றமற்றவர் ஆகிவிட முடியாது.. குத்தத்த ஒத்துக்கிட்டு சரணடைஞ்சுட்டா.. இபிகோ படி வழங்கப்படும் தண்டனை மட்டுமே.. இல்லாங்காட்டி, விஞ்ஞான முறையில எஸ்கேப் ஆனவனெல்லாம் செத்தப்பறமாவும்.. தலைமுறை தலைமுறையா குற்றவாளியே.. பத்து வருஷமா மக்கள் விரட்டி விட்டு அடிச்சதாலதான் இன்னைக்கி பதவியேத்ததுலேர்ந்து ஒரு மாயை.. மாயத் தோற்றம்.. ரொம்பநாள் (5 வருஷமும்) நடிச்சுக்கிட்டே இருக்க முடியாதுல்ல.. இப்பவே.. சம்பந்தம் இல்லாத துறைகளுக்கு.. சம்பந்தமே இல்லாத ஆட்கள் கூட்டமா போய் முட்டு குடுக்கவேண்டியிருக்கு.. நாடகமாடி நம்ப வெச்சு 'நீட்' டுல கோட்டை விட்டவனுங்கள்லாம் 'நோட்டா' வ பத்தி பேசலாமோ..?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X