சட்டசபை வரலாற்றை மாற்றி அமைக்கும் திமுக: ஜெயக்குமார் குற்றச்சாட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை வரலாற்றை மாற்றி அமைக்கும் திமுக: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (61)
Share
சென்னை: சட்டசபை வரலாற்றை திமுக மாற்றி அமைத்து விழா கொண்டாடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத் திறப்பு விழா, இன்று (ஆக., 2) மாலை 5:00 மணிக்கு நடக்க உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கருணாநிதி படத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில்,
ADMK, Jayakumar, TNAssembly, DMK, திமுக, அதிமுக, ஜெயக்குமார், சட்டசபை

சென்னை: சட்டசபை வரலாற்றை திமுக மாற்றி அமைத்து விழா கொண்டாடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத் திறப்பு விழா, இன்று (ஆக., 2) மாலை 5:00 மணிக்கு நடக்க உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கருணாநிதி படத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், கட்சி தலைவர்கள் என, 350க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
சட்டசபையில் நடக்கும் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்கிறது. சட்டசபை வரலாற்றை திமுக மாற்றி அமைத்து விழா கொண்டாடுகிறது. சட்டசபையில் ஜெயலலிதாவின் படத் திறப்பு விழாவை திமுக.,வினர் புறக்கணித்தனர். அப்படி இருக்கும்போது கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு நாங்கள் எப்படி வரமுடியும்?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X