அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் வீடற்றவர்களாகும் அபாயம்

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
வாஷிங்டன்: உலகம் முழுதும் கோவிட் பெருந்தொற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவில் சில மாகாணங்களில், 20 சதவீத மக்கள் வீட்டு வாடகையை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, தென் மாகாணங்கள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. 16 சதவீத மக்கள் வீட்டு வாடகை செலுத்தவில்லை.

வாஷிங்டன்: உலகம் முழுதும் கோவிட் பெருந்தொற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவில் சில மாகாணங்களில், 20 சதவீத மக்கள் வீட்டு வாடகையை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, தென் மாகாணங்கள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. 16 சதவீத மக்கள் வீட்டு வாடகை செலுத்தவில்லை.



latest tamil news



வாடகை செலுத்த முடியாமல் தவித்த அமெரிக்கர்களை, அவர்கள் குடியிருக்கும் வீட்டிலிருந்து வெளியேற்ற நாடு முழுவதும் 11 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு நேற்று முடிவுக்கு வந்த நிலையில், வாடகை செலுத்தாத லட்சக்கணக்கானோர் வீட்டிலிருந்து வெளியேற மறுத்து, அரசிடம் உதவி கோரி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் வீட்டு வாடகை செலுத்துவதற்காக அரசு பில்லியன் டாலர்களை ஒதுக்கியது. ஆனால், இந்த நிதியை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடற்றவர்களாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், வீட்டிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க பார்லிமென்டிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், குடியரசு கட்சி உறுப்பினர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் தடையை நீட்டிக்காமலேயே பிரதிநிதிகள் சபை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஆக-202108:29:44 IST Report Abuse
ராஜா அவனுங்க பிரச்னையை அவங்களே பார்த்துப்பாங்க...நீங்க ஏன்யா இங்க இருந்து குதிக்கிறீங்க?
Rate this:
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
06-ஆக-202111:15:32 IST Report Abuse
தஞ்சை மன்னர் அங்க இருக்கும் பலரில் அவா குறுப்பு அதிகம் இருக்கு எல்லாம் ஒரு இன பாசம்தான்...
Rate this:
Cancel
03-ஆக-202105:21:39 IST Report Abuse
அப்புசாமி இங்கே எல்லோருக்கும் வூடு குடுத்து சுபிச்சமா இருக்கோம். உலகே பாராட்டுதுன்னு மத்திய அமைச்சர் கூறுகிறார்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
02-ஆக-202123:47:08 IST Report Abuse
மலரின் மகள் ஒவ்வொரு காலாண்டிற்கும் டிரில்லியன் டாலர் நோட்டை பிரிண்ட் செய்கிறார்களே எதற்காக. அரசு கொடுக்கட்டும் அனைவருக்கும். இரண்டாயிரம் டாலர்கள் கொடுத்தார்கள் அல்லவா அதை போலவே நோட்டை பிரிண்ட் அடித்து கொடுத்துவிடவேண்டியதுதான். கேப்பிடலிசத்தில் ஒரு கம்யூனிசம். தேவைதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X