ரத்து செய்யப்பட்ட சட்ட பிரிவின் கீழ் வழக்கு: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டம் பிரவு 66ஏ, கடந்த 2015ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் இச்சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல காவல் நிலையங்களில் 1,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (ஆக., 2) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 'நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களின்

புதுடில்லி: தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டம் பிரவு 66ஏ, கடந்த 2015ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் இச்சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல காவல் நிலையங்களில் 1,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.



latest tamil news



இதுகுறித்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (ஆக., 2) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 'நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் ஜெனரலுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு 4 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும்' என, உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நீதிபதி ஆர்.எப். நாரிமன் கூறுகையில், 'இதுகுறித்து நீதித்துறை தனிப்பட்ட அளவில் விசாரணை மேற்கொள்ளும். இந்த விவகாரம் நீதித்துறை சார்ந்தது மட்டுமல்ல காவல்துறையும் சார்ந்ததும் தான். அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.


latest tamil news



இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்ட போது, 'இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கூடாது. அப்படி செய்திருந்தால் அதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஆக-202112:14:05 IST Report Abuse
Venkat Sadagopan அரசு ஊழியர்கள் சட்டங்களை மதிக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் உத்தரவுகளை சரியாகப் பின் பற்ற வேண்டும். அது அவர்கள் கடமை. அவ்வாறு அவர்கள் செய்யாதது அவர்கள் கடமையிலிருந்து தவறியதாகும். ஜனநாயகத்தைக் காக்கும் பெரிய பொருப்பு இவர்களிடமே உள்ளது.
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
02-ஆக-202121:09:25 IST Report Abuse
dina அரசு சட்டத்தில் மணி மாற்றம் செய்தல் போஸ்டாபிஸ்,பேங்க் இண்டேறேச்ட் ரேட்இல் மாற்றம் உடனடியாக செய்யப்பட்டு விடுகிறேதே அது எப்படி ?
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-ஆக-202119:34:26 IST Report Abuse
Pugazh V முன்னாள் காவல்துறை அமைச்சர் இபிஎஸ் காலத்தில் எத்தனை வழக்குகள் ,
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
02-ஆக-202120:55:07 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்இது குறிப்பாக தமிழகம் தொடர்புடைய செய்தியல்ல பொது அறிவை வளர்த்துக்கொண்டு கருத்திடவும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X