பொது செய்தி

இந்தியா

புவனேஷ்வரில் 100% மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி சாதனை

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புவனேஷ்வர்: புவனேஷ்வரில் 18 வயதை கடந்த அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் இந்திய நகரம் என்னும் சாதனையை படைத்துள்ளது.ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய நகரமானது. இதுதவிர
Bhubaneswar, CovidVaccine, 100Percent, First City, புவனேஸ்வர், கொரோனா, கோவிட், தடுப்பூசி, 100 சதவீதம், முதல் நகரம், சாதனை

புவனேஷ்வர்: புவனேஷ்வரில் 18 வயதை கடந்த அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் இந்திய நகரம் என்னும் சாதனையை படைத்துள்ளது.

ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய நகரமானது. இதுதவிர புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு முதல் தவணை கோவிட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக புவனேஷ்வர் மாநகராட்சி உதவி கமிஷனர் அன்ஷுமன் ராத் கூறியதாவது:
கோவிட்-க்கு எதிராக 100 சதவீதம் மக்கள் தொகைக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதோடு புவனேஷ்வரில் உள்ள சுமார் ஒரு லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாட்டின் பல நகரங்களில் கோவிட் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil newsஜூலை 31ம் தேதிக்குள் புவனேஷ்வரில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது என்று இலக்கு நிர்ணயித்தோம், அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட 9 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு 2வது தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தி விட்டோம். இதில் 31 ஆயிரம் சுகாதார ஊழியர்கள், 33 ஆயிரம் முன்களப் பணியாளர்கள், 18 முதல் 45 வயதுடையோர் 5.17 லட்சம் பேர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 3.2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஜூலை 30ம் தேதி வரை 18.35 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

100 சதவீதம் என்ற இலக்கை எட்ட நகரம் முழுதும் 55 தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் 30 மையங்கள் இயக்கப்பட்டன. அதே போல் நடமாடும் தடுப்பூசி மையங்களும் நகரம் முழுதும் ஏற்படுத்தப்பட்டன. இது தவிர பள்ளிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக நோய் தடுப்பாற்றல் மையங்கள் 15 என்ற எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
03-ஆக-202109:00:18 IST Report Abuse
DARMHAR நவீன் பட்நாயக் என்றாலே சும்மாவா? மகா திறமை சாலி அல்லவா
Rate this:
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
03-ஆக-202102:00:14 IST Report Abuse
Sathish கேரளாவில் நிலைமை ரொம்ப மோசம். கொரோனா உற்பத்தி நிலையம் அங்கே இருக்கு. இங்க ஒருபக்கம் ஊசிபோட்டாலும் அங்கே கட்டுக்குள் இல்லாத காரணத்தால் நாட்டில் எல்லா பகுதிக்கும் பரவும் அபாயம் உள்ளது. முதன் முதலில் நம் நாட்டில் கொரோனா பரவியது கேரளாவில் இருந்து தான் என்பதை மறக்கவேண்டாம்.
Rate this:
Cancel
Raj - ,
02-ஆக-202118:43:11 IST Report Abuse
Raj It is just a city. Looks they focused just capital. Poor rural people 😪
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X