டிஜே நினைவு சர்வதேச புகைப்பட போட்டி(2021) முடிவுகள்

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021
Share
Advertisement
கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் (எல்எம்டபிள்யூ) நடத்தும் டிஜே நினைவு புகைப்பட போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, திறமையானவர்கள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.டிஜே நினைவு புகைப்பட போட்டி, லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் டி ஜெயவர்த்தனவேலு நினைவாக



latest tamil news


கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் (எல்எம்டபிள்யூ) நடத்தும் டிஜே நினைவு புகைப்பட போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, திறமையானவர்கள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.


latest tamil news


டிஜே நினைவு புகைப்பட போட்டி, லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் டி ஜெயவர்த்தனவேலு நினைவாக நடத்தப்படுகிறது.


latest tamil news


Advertisement

புகைப்பட போட்டியின் முதலாவது பதிப்பு 2012 ல் நடந்தது. இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது 10 வது பதிப்பாக நடத்தப்பட்டுள்ளது. இந்த முறை கோவிட் காரணமாக அனைத்துமே ஆன்லைனில் நடந்தது.


latest tamil news


ஊட்டியைச் சேர்ந்த இக்பால் முகமது, சென்னையைச் சேர்ந்த ராதிகா ராமசாமி, வால்பாறையைச் சேர்ந்த திவ்யா, உள்ளிட்டோர் நடுவர்களாக செயல்பட்டு புகைப்படங்களை தேர்வு செய்தனர். இப்போட்டியின் நிர்வாகியாக கே. மருதாச்சலம் செயல்பட்டார்.


latest tamil news


சர்வதேச போட்டி என்பதால் உலகம் முழுவதிலும் உள்ள 2040 புகைப்படக் கலைஞர்கள் அனுப்பிய 8,617படங்களில் இருந்து பரிசுக்குரிய படங்கள் தேர்வு செய்யப்பட்டன.


latest tamil news


போட்டியானது இரு பிரிவுகளில் நடத்தப்பட்டது ஒன்று இயற்கை என்றும் இரண்டாவது சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.இரு பிரிவுகளிலும் இருந்து முதல் மற்றும் இரண்டாவது பரிசுகள் தேர்வு செய்யப்பட்டன.மேலும் இரு பிரிவுகளில் இருந்து இருபது படங்கள் சர்டிபிகேட் ஆப் மெரிட் பிரிவில் தேர்வாகியது.பரிசுத் தொகை பத்து லட்சம் ரூபாயும் சான்றிதழும் வெற்றியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.லட்சுமி மெஷின் ஒர்க்ஸ், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, பரிசுகள் வென்றோரை வாழ்த்தினார்.


latest tamil news


மேலும் விபரங்களுக்கு: www.djmpc.in என்ற இணையத்தள முகவரியை பார்வையிடலாம்.


latest tamil news


-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X