பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 3வது அலை எதிர்கொள்ள 50 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கோவிட் 3வது அலையை எதிர்கொள்வதற்காக, 50 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும், இதுவரை 10 ஆயிரம் செவிலியர்கள், 3,800 குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் (ஐ.ஏ.பி) தெரிவித்துள்ளது.இந்தியாவில் கோவிட் 3வது அலை தாக்கும் என மருத்துவ வல்லநர்கள் எச்சரித்து வரும்
Covid, Third Wave, Tamil Nadu, Nurses, Doctors, Trained, Paediatric, IAP, கொரோனா, கோவிட், 3வது அலை, தமிழகம், செவிலியர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள், பயிற்சி

சென்னை: தமிழகத்தில் கோவிட் 3வது அலையை எதிர்கொள்வதற்காக, 50 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும், இதுவரை 10 ஆயிரம் செவிலியர்கள், 3,800 குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் (ஐ.ஏ.பி) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிட் 3வது அலை தாக்கும் என மருத்துவ வல்லநர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் கோவிட் 3வது அலையை தடுக்கும் விதமாக செவிலியர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஐ.ஏ.பி.,யின் மாநில செயலாளர் கே.ராஜேந்திரன் கூறியதாவது:


latest tamil news


தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளையும் சேர்த்து இதுவரை 10 ஆயிரம் செவிலியர்கள், மற்றும் 3,800 குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் 3வது அலை துவங்குவதற்கு முன்பாக கிட்டத்தட்ட 50 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம்.

கோவிட் 3வது அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது, மருத்துவ மேலாண்மை மற்றும் மருத்துவ சாதனங்களை எவ்வாறு கையாள்வது, கோவிட் பாதித்த குழந்தைகளுக்கு எவ்வாறு சிகிச்சையளித்து உயிர்களை காப்பது என்பது உள்ளிட்ட பயிற்சிகளை இலவசமாக வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
02-ஆக-202119:01:02 IST Report Abuse
RajanRajan முதலில் அந்த தகன மேடை எண்ணிக்கையை அதிகரித்து ange எரிவாயுவு பற்றா குறை இல்லாம பண்ணுங்கப்பா. குரானா வேகமெடுப்பதே உடனடியாக பிணங்களை எரிக்காமல் வரிசை கட்டுவது தான்.காரணம்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
02-ஆக-202118:45:15 IST Report Abuse
M  Ramachandran வெளியில் சொல்லி எடுப்பது என்னமோ கொராணா களப்பணியாளர் என்று. அவர்களுக்கு கொடுக்க படும் வேலையோ வீடு வீடாக சென்று மழை நீர் சேகரிப்பு இருக்கிறதா என்று நேரிடையாக கணக்கெடுத்து கொடுக்கவேண்டும். அதனால் காலா பணிகளுக்கு வீடு வீடாக கண்காணிக்க வருவதில்லை. இன்னும் என்னெவெல்லாம் தில்லு முல்லு நடக்கறதோ?
Rate this:
Cancel
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
02-ஆக-202117:39:51 IST Report Abuse
K E MUKUNDARAJAN கொரானா விதி மீறுபவர்களை ஒரு வளாகத்தில் இருத்தி, மூன்று நாட்களுக்கு பயிற்சி கொடுத்து சாப்பாடு செலவையும் வசூல் செய்தால் எந்த அலையும் வராது,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X