தமிழகத்தில் 3வது அலை எதிர்கொள்ள 50 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 3வது அலை எதிர்கொள்ள 50 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (4)
Share
சென்னை: தமிழகத்தில் கோவிட் 3வது அலையை எதிர்கொள்வதற்காக, 50 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும், இதுவரை 10 ஆயிரம் செவிலியர்கள், 3,800 குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் (ஐ.ஏ.பி) தெரிவித்துள்ளது.இந்தியாவில் கோவிட் 3வது அலை தாக்கும் என மருத்துவ வல்லநர்கள் எச்சரித்து வரும்
Covid, Third Wave, Tamil Nadu, Nurses, Doctors, Trained, Paediatric, IAP, கொரோனா, கோவிட், 3வது அலை, தமிழகம், செவிலியர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள், பயிற்சி

சென்னை: தமிழகத்தில் கோவிட் 3வது அலையை எதிர்கொள்வதற்காக, 50 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும், இதுவரை 10 ஆயிரம் செவிலியர்கள், 3,800 குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் (ஐ.ஏ.பி) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிட் 3வது அலை தாக்கும் என மருத்துவ வல்லநர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் கோவிட் 3வது அலையை தடுக்கும் விதமாக செவிலியர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஐ.ஏ.பி.,யின் மாநில செயலாளர் கே.ராஜேந்திரன் கூறியதாவது:


latest tamil news


தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளையும் சேர்த்து இதுவரை 10 ஆயிரம் செவிலியர்கள், மற்றும் 3,800 குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் 3வது அலை துவங்குவதற்கு முன்பாக கிட்டத்தட்ட 50 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம்.

கோவிட் 3வது அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது, மருத்துவ மேலாண்மை மற்றும் மருத்துவ சாதனங்களை எவ்வாறு கையாள்வது, கோவிட் பாதித்த குழந்தைகளுக்கு எவ்வாறு சிகிச்சையளித்து உயிர்களை காப்பது என்பது உள்ளிட்ட பயிற்சிகளை இலவசமாக வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X