பிரதமர் மோடி அரசின் முடிவுகளை உலகமே பாராட்டுகிறது: மத்திய அமைச்சர்

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரமான 370 பிரிவு ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) உள்ளிட்ட பிரதமர் மோடி அரசின் முடிவுகளையும், கொள்கைகளையும் உலகமே பாராட்டுவதாக மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பாட் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாகச் செயல்பட்டு
Entire World, Praising, Prime Minister, Narendra Modi, Policies, Opposition, Maligning, MoS Defence

புதுடில்லி: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரமான 370 பிரிவு ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) உள்ளிட்ட பிரதமர் மோடி அரசின் முடிவுகளையும், கொள்கைகளையும் உலகமே பாராட்டுவதாக மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பாட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் ஆட்சி செய்த அரசுகளின் குறைபாடுகளை மத்திய அரசு சரிசெய்யும்போது அதை எதிர்க்கட்சிகள் விரும்புவதில்லை. குறிப்பாக காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் ரத்து, 35ஏ பிரிவு ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவற்றை விரும்பவில்லை. பயங்கரவாதிகள் மீதான துல்லியத் தாக்குதல், பாகிஸ்தான் ராணுவத்துடனான விமானப்படைத் தாக்குதலில் நமது ராணுவத்தினர் அளித்த பதிலடியையும் குறை கூறினார்கள்.


latest tamil news


தற்போதுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல சாதனைகளைச் செய்துவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் மோடி ஆட்சியின் மீதும், பிரதமர் மோடியின் மீதும் அவதூறு பரப்புவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். பிரதமர் மோடியின் முடிவுகளையும், அரசின் கொள்கைகளையும் உலகமே பாராட்டுகிறது. ஆனால், இந்த நாட்டைச் சேர்ந்த எதிர்க்கட்சியினர் தேவையில்லாத விமர்சனங்களை வைப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் இதுபோன்ற நடத்தைக்குப் பின்புலம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. எப்போதுமே குறைகூற வேண்டும் என்ற மனநிலையில் இருக்கலாம்.

எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் பொறுப்பற்ற முறையில் நடந்துக்கொண்டு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஜனநாயகத்தின் நலனுக்கு உகந்தது அல்ல. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவையை முடக்குகின்றன. பார்லிமென்டை செயல்படவிடாமல் செய்வது வேதனையாக இருக்கிறது; இது ஜனநாயகத்தின் துயரமாகும். அசாம், மிசோரம் எல்லைப் பிரச்னையை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. விரைவில் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பும். இவ்வாறு அஜய் பாட் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
03-ஆக-202108:53:07 IST Report Abuse
rajan ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரமான 370 பிரிவு ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) உள்ளிட்ட பிரதமர் மோடி அரசின் முடிவுகளையும், கொள்கைகளையும் உலகமே பாராட்டுவதாக மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பாட் தெரிவித்துள்ளார்.- மோடியின் முடிவுகள் பல அதில் சில -1. 15 லட்சம் அக்கவன்டில் போடப்படும் 2. GST பணம் மாநிலங்களுக்கு ஒவ்வொரு மூன்று மாதம் பிறகு சரியாக அனுப்பி வைக்கப்படும் 3. பண மதிப்பிழப்பு ஐம்பதே நாட்களில் இந்தியாவை சொர்க்கமாக மாற்றும். இல்லை என்றால் என்னை கேளுங்கள் 4. கொரோனவை ஒழித்து விட்டோம் 5. தட்டு விளக்கு மணி ஆட்டுவது நல்லது 6. மேகத்தின் வழியாக போகும் விமானம் ரேடாரில் தெரியாது 7. கொரோன தடுப்பூசி விநியோகத்தில் எடுத்த முடிவும் உச்ச்ச்நீதிமன்றத்தின் விமர்சனமும் உத்தரவும் வருடத்திற்கு இரண்டு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கி உலகத்திற்கு முன்மாதிரி பிரதமர் இன்னும் எவ்வளவோ இருக்கு ...
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
03-ஆக-202107:24:11 IST Report Abuse
Nepolian S Please don't repeat the same comment
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
03-ஆக-202101:56:27 IST Report Abuse
Venkatakrishnan வாயில் வடைசுட்டு எடுத்த முடிவுகளும், சூளுரைத்த சத்தியங்களும் 2014 இல் இருந்தே மக்கள் கேட்டுக் கொண்டுதான் உள்ளனர்.... ஆனால் இன்றுவரை நாட்டின் பொருளாதாரத்திற்கோ சுகாதாரத்திற்கோ அவைகளால் பயனேதும் இல்லை என்பதே நிதர்சனம்... வேலை இல்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுவதுதான் மிச்சம்... இதைப் பற்றிப் பேச ஒரு பத்திரிகைக்கும் யோகிதை இல்லை.... இங்கே ஜாதிதான் முக்கியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X