பிரதமர் மோடி அரசின் முடிவுகளை உலகமே பாராட்டுகிறது: மத்திய அமைச்சர்| Dinamalar

பிரதமர் மோடி அரசின் முடிவுகளை உலகமே பாராட்டுகிறது: மத்திய அமைச்சர்

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (37)
Share
புதுடில்லி: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரமான 370 பிரிவு ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) உள்ளிட்ட பிரதமர் மோடி அரசின் முடிவுகளையும், கொள்கைகளையும் உலகமே பாராட்டுவதாக மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பாட் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாகச் செயல்பட்டு
Entire World, Praising, Prime Minister, Narendra Modi, Policies, Opposition, Maligning, MoS Defence

புதுடில்லி: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரமான 370 பிரிவு ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) உள்ளிட்ட பிரதமர் மோடி அரசின் முடிவுகளையும், கொள்கைகளையும் உலகமே பாராட்டுவதாக மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பாட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் ஆட்சி செய்த அரசுகளின் குறைபாடுகளை மத்திய அரசு சரிசெய்யும்போது அதை எதிர்க்கட்சிகள் விரும்புவதில்லை. குறிப்பாக காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் ரத்து, 35ஏ பிரிவு ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவற்றை விரும்பவில்லை. பயங்கரவாதிகள் மீதான துல்லியத் தாக்குதல், பாகிஸ்தான் ராணுவத்துடனான விமானப்படைத் தாக்குதலில் நமது ராணுவத்தினர் அளித்த பதிலடியையும் குறை கூறினார்கள்.


latest tamil news


தற்போதுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல சாதனைகளைச் செய்துவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் மோடி ஆட்சியின் மீதும், பிரதமர் மோடியின் மீதும் அவதூறு பரப்புவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். பிரதமர் மோடியின் முடிவுகளையும், அரசின் கொள்கைகளையும் உலகமே பாராட்டுகிறது. ஆனால், இந்த நாட்டைச் சேர்ந்த எதிர்க்கட்சியினர் தேவையில்லாத விமர்சனங்களை வைப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் இதுபோன்ற நடத்தைக்குப் பின்புலம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. எப்போதுமே குறைகூற வேண்டும் என்ற மனநிலையில் இருக்கலாம்.

எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் பொறுப்பற்ற முறையில் நடந்துக்கொண்டு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஜனநாயகத்தின் நலனுக்கு உகந்தது அல்ல. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவையை முடக்குகின்றன. பார்லிமென்டை செயல்படவிடாமல் செய்வது வேதனையாக இருக்கிறது; இது ஜனநாயகத்தின் துயரமாகும். அசாம், மிசோரம் எல்லைப் பிரச்னையை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. விரைவில் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பும். இவ்வாறு அஜய் பாட் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X