பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி ஒப்புதலுக்கான விண்ணப்பம்: திரும்ப பெற்ற ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தாங்கள் தயாரித்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக் கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை, ஜான்சன் அண்ட் ஜான்சன் திரும்ப பெற்றுள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்து உள்ளது.ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தங்களது ஜான்சன் கோவிட்19 தடுப்பூசிக்கான ஆய்வக பரிசோதனையை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கக் கோரி, கடந்த ஏப்ரல் மாதம்

புதுடில்லி: இந்தியாவில் தாங்கள் தயாரித்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக் கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை, ஜான்சன் அண்ட் ஜான்சன் திரும்ப பெற்றுள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்து உள்ளது.



latest tamil news



ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தங்களது ஜான்சன் கோவிட்19 தடுப்பூசிக்கான ஆய்வக பரிசோதனையை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கக் கோரி, கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்திருந்தது. ஆனால், அமெரிக்காவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டது.


latest tamil news



இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறுகையில், 'தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் இழப்பீடு உட்பட சட்ட சிக்கல்கள் குறித்து பேச குழு அமைக்கப்பட்டு உள்ளது. பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களுடன் இக்குழு ஆலோசனை மேற்கொள்ளும்' என்றார்.இதையடுத்து தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக் கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இன்று (ஆக., 2) திரும்ப பெற்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X