அரசியல் செய்தி

தமிழ்நாடு

சமூக சீர்த்திருத்தங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி: ஜனாதிபதி புகழாரம்

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (107)
Share
Advertisement
சென்னை: தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத் திறப்பு விழா, இன்று (ஆக., 2) புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை கட்டடத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.
TNAssembly, Karunanidhi, RamNathKovind, President, MKStalin, DMK, Tamilnadu, தமிழகம், சட்டசபை, கருணாநிதி, படம், திறப்பு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், முதல்வர், ஸ்டாலின்

சென்னை: தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத் திறப்பு விழா, இன்று (ஆக., 2) புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை கட்டடத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். விழாவையொட்டி தலைமை செயலக வளாகம் கமாண்டோ படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வளாகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.ஏற்கனவே 15 தலைவர்களின் படங்கள் உள்ள நிலையில் 16வது படமாக கருணாநிதியின் படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், கட்சி தலைவர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.


latest tamil news
கருணாநிதி படம்

விழாவின் ஒருபகுதியாக முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். யானை சிலை மீது கருணாநிதி கைவைத்து நிற்பது போன்ற உருவப்படம் சட்டமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது.படத்திற்குக் கீழே 'காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியது:
இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகின்றேன்.
உண்மையில் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்த நாள்.
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்றதில் பெருமிதம் கொள்கிறேன்.
ஜனநாயாக அடிப்படையிலான நிர்வாகத்தை உறுதி செய்வதில் சட்டசபை மிகவும் சிறப்பான அமைப்பாக உள்ளது.
பல முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்கள் இந்த சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நம் நாடு இந்த ஆண்டு பல துறைகளில் சாதனை படைத்துள்ளது.
தமிழக மக்களின் சிறப்புக்களையும் பெருமைகளையும் திறமைகளையும் மகாகவியின் பாரதியார் கவிதைகளை மேற்கோள் காட்டி பேசினார் ஜனாதிபதி, "மந்திரம் கற்போம்; வினைத் தந்திரம் கற்போம் வான அளப்போம் கடல் மீனை யளப்போம் சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம் என்று குறிப்பிட்டார் ஜனாதிபதி.
தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் சினிமாவிற்கும் பெரும்பங்காற்றியவர் கருணாநிதி என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, தனது புரட்சிகரமான கருத்துக்களால் சமூக சீர்த்திருத்தங்களுக்கு வித்திட்டவர் என்று புகழாரம் சூட்டினார்.
அவரது உருவப்படத்தை நூற்றாண்டு விழா காணும் இந்த சட்டசபையில் திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்வதாகவும் கூறினார்

இந்த சட்டசபையில் மகாத்மா காந்தி, ராஜாஜி, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், பெரியார், அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத், எம்ஜிஆர், ஜெயலலிதா,வ.உ.சி, ப.சுப்புராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
முதல்வராக மகிழ்கிறேன்இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று. இந்த சட்டசபையில்தான் மகளிர் நலன் காக்கும் சிறப்பான சட்டங்களை கருணாநிதி நிறைவேற்றியுள்ளார் . காவிரி நடுவர் மன்றம் கோரும் தீர்மானம் இந்த சட்டசபையில் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையை கொண்டு வந்த சட்டசபை இது. பார் போற்றும் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்ட தமிழக சட்டசபை இது. சீர்திருத்த திட்டங்களை இயற்றி தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். எம்.எல்.ஏ., எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர், முதல்வர் ஆகிய பல பதவிகளை வகித்தவர் கருணாநிதி. கருணாநிதியின் படத்தை ஜனாதிபதி திறந்து வைத்ததை கண்டு முதல்வராக நான் மகிழ்கிறேன். மகனாக நெகிழ்கிறேன் இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


ஜெய்ஹிந்த்கவர்னர் பன்வாரிவால் பேசி முடிக்கும் போது, ஜெய்ஹிந்த் என்றும், ஜெய் தமிழ்நாடு என்றும் பேசிமுடித்தார்.

ஜனாதிபதியும் தனது உரையில் 'ஜெய்ஹிந்த் ' என பேசிமுடித்தார்.


அ.தி.மு.க., புறக்கணிப்பு

எதிர்பார்த்தது போலவே நிகழ்ச்சியில் அ.தி.மு.க ., எம். எல். ஏ.,க்கள் யாரும் பங்கேற்கவில்லை.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்கிறது. ஏனென்றால் சட்டசபையின் வரலாற்றையே மாற்றியமைக்க திமுக முயல்கிறது.
சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தைத் திறக்கும் நிகழ்ச்சியை திமுகவினர் புறக்கணித்தனர். அப்படி இருக்கும்போது நாங்கள் மட்டும் கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு எப்படி வரமுடியும்" என்றார்.


Advertisement
வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
04-ஆக-202104:49:15 IST Report Abuse
meenakshisundaram சமூக சீர்திருத்தம்னா இன்னா?ஜாதி வெறியை தூண்டுறதா ?இவர் என்ன ராஜாராம் மோகன் ராய் ஆகிட்டாரா ?
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
03-ஆக-202114:22:41 IST Report Abuse
s vinayak இங்கு பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். ஜெய் தமிழ்நாடு என்றதற்கு ஜெயலலிதா ஆண்ட தமிழ்நாடு என்று கொள்ள வேண்டும்
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
03-ஆக-202112:37:10 IST Report Abuse
s vinayak பல வருடங்களுக்கு முன் பெண் சட்டமன்ற உறுப்பினரை துச்சாதனன்போல் மானபங்கம் செய்ய முற்பட்டபோது வேடிக்கை பார்த்தவரும் இந்த சீர்கெட்டவாதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X