பொது செய்தி

இந்தியா

டெல்டா பிளஸ் கொரோனாவை எதிர்க்கும் கோவாக்சின் : ஐ.சி.எம்.ஆர்

Updated : ஆக 02, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி, டெல்டா பிளஸ் வகை கொரொனாவை எதிர்க்கிறது என இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.கோவாக்சின் தடுப்பூசி, கொரோனா வைரசுக்கு எதிரான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஒன்றாகும். இவைதவிர சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி
Covid Vaccine, Covaxine, DeltaPlus Varient, ICMR, கொரோனா, கோவிட், தடுப்பூசி, டெல்டா பிளஸ், கோவாக்சின், ஐசிஎம்ஆர்

புதுடில்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி, டெல்டா பிளஸ் வகை கொரொனாவை எதிர்க்கிறது என இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி, கொரோனா வைரசுக்கு எதிரான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஒன்றாகும். இவைதவிர சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் தற்போது கொரோனா 2வது அலையின் தீவிரம் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் 3வது அலை வரக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.


latest tamil news


இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி, டெல்டா பிளஸ் வகை கொரோனாவை எதிர்க்கும் திறன் கொண்டது என ஐ.சி.எம்.ஆர்., தெரிவித்துள்ளது. கடந்த மாதம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இறுதி பகுப்பாய்வில், ‛கோவாக்சின் தடுப்பூசி அறிகுறிகளுடன் கூடிய கொரோனா வைரசுக்கு எதிராக 77.8 சதவீத எதிர்ப்பு திறனுடனும், டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக 65.2 சதவீத எதிர்ப்பு திறனையும் பெற்றிருந்தது. தீவிரமான கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு 93.4 சதவீதம் எதிர்ப்பு திறனை கொண்டிருக்கிறது என்பதனை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிப்பதாக' ஐதராபாத்தைச் சேர்ந்த பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
03-ஆக-202109:19:09 IST Report Abuse
Appan தடுப்பூசி War footing செய்ய வேண்டும்..ஆனால் இப்போ போகிற பொதிகை பார்த்தால் ஆமை வேகத்தில் போகிறது..இப்போ கோரினாவால் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு போய் விட்டது..பொருளாதாரத்தை சரி செய்ய கொரோனவை ஒழிக்கணும்..அதன் முதல் படி எல்லோருக்கும் தடுப்பூசி போடுவது..அதற்க்கு தடுப்புஊசி அதிக அளவில் உற்பத்தி பண்ணனும்..இப்போ போகிற வேகம் அமை போல் செல்கிறது. தினம் தடுப்பூசி உற்பத்தி அதகரிக்கணும்..ஆனால் கிணற்றில் போட்ட கல் போல் எந்த பேச்சும் இல்லாமல் உள்ளது..நாடு எங்கே போகிறது.
Rate this:
Cancel
என்னுயிர்த்தமிழகமே - Ameerpet, Hyderabad,இந்தியா
03-ஆக-202103:38:03 IST Report Abuse
என்னுயிர்த்தமிழகமே அப்போ கோவிஷீல்ட் போ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
02-ஆக-202120:53:53 IST Report Abuse
Ramesh Sargam நாடு முழுவதும் தற்போது கொரோனா 3-வது அலை ஆரம்பித்துவிட்டது. ஆகையால், முடிந்த அளவுக்கு நம்நாட்டில் உட்பத்தியாகும் தடுப்பூசிகளை, தடுப்பூசி போடாத மக்களுக்கு சீக்கிரம் போட்டு, முன்றாவது அலை மேலும் வீரியம் எடுத்து, நான்காவது அலையாக ஆவதற்கு முன் நாட்டு மக்களை காப்பாற்றவேண்டியது மத்திய, மாநில அரசின் கடமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X