அரசியல் செய்தி

தமிழ்நாடு

அறிவியல் ஆயிரம்

Added : ஆக 02, 2021
Share
Advertisement
வேறுபடும் அறிகுறிகொரோனா பாதிப்புக்கான அறிகுறி வயது, பாலினம் வாரியாக வேறுபடுகிறது என லண்டன் கிங்ஸ் கல்லுாரி ஆய்வு தெரிவித்துள்ளது. தொடர் இருமல், வாசனை இழப்பு, அடி வயிற்று வலி, கால் கொப்பளம் உட்பட19 அறிகுறி ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. இதில் 60 வயதுக்கு மேல் வாசனை இழப்பு ஏற்படுவதில்லை. வயிற்றுபோக்கு பொதுவான அறிகுறி. 40 - 59 வயதினருக்கு தொடர் இருமல் பொதுவானது. பெண்களை


வேறுபடும் அறிகுறி



கொரோனா பாதிப்புக்கான அறிகுறி வயது, பாலினம் வாரியாக வேறுபடுகிறது என லண்டன் கிங்ஸ் கல்லுாரி ஆய்வு தெரிவித்துள்ளது. தொடர் இருமல், வாசனை இழப்பு, அடி வயிற்று வலி, கால் கொப்பளம் உட்பட19 அறிகுறி ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. இதில்
60 வயதுக்கு மேல் வாசனை இழப்பு ஏற்படுவதில்லை. வயிற்றுபோக்கு பொதுவான அறிகுறி. 40 - 59 வயதினருக்கு தொடர் இருமல் பொதுவானது. பெண்களை விட ஆண்களுக்கு மூச்சுதிணறல், காய்ச்சல் அதிகம். பெண்களுக்கு வாசனை இழப்பு, மார்பு வலி, தொடர் இருமல் பொதுவான அறிகுறியாக உள்ளது.

**************


தகவல் சுரங்கம்




ஏழு முறை



சர்வதேச அளவில் பாதுகாப்பு, அமைதியை ஏற்படுத்து வதற்காக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் 1945 அக் 24ல் உருவாக்கப்பட்டது. இதில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இது தவிர இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை 10 நாடுகள் சுழற்சி முறையில் தற்காலிக உறுப்பினராக சேர்க்கப்படுகின்றன. தற்போதைய 10 தற்காலிக உறுப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதற்கு முன் ஏழு முறை இடம் பெற்றுள்ளது. 1945 - 1965 வரை ஆறு நாடுகள் தற்காலிக உறுப்பினராக சேர்க்கப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X