அரசியல் செய்தி

தமிழ்நாடு

பஸ் கட்டண முறைகேடு ஓ.பி.எஸ்., கண்டனம்

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 02, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை :'மகளிருக்கான இலவச பயணத்தால் ஏற்படும் இழப்பு, ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:முதல்வர் அறிவிப்பின்படி, நகர பஸ்களில் மகளிர் இலவசமாக பயணம் செய்கின்றனர்.ஆனால், சில பகுதிகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பஸ்களில், அந்த இழப்பை ஈடுசெய்ய, பஸ்களில்
பஸ் கட்டணம், முறைகேடு, ஓ.பி.எஸ்., கண்டனம்

சென்னை :'மகளிருக்கான இலவச பயணத்தால் ஏற்படும் இழப்பு, ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:

முதல்வர் அறிவிப்பின்படி, நகர பஸ்களில் மகளிர் இலவசமாக பயணம் செய்கின்றனர்.ஆனால், சில பகுதிகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பஸ்களில், அந்த இழப்பை ஈடுசெய்ய, பஸ்களில் பயணம் செய்யும் ஆண்களிடம் குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இதற்கு முன் ௫ ரூபாய் தான் குறைந்தபட்ச கட்டணமாக இருந்தது. சட்டத்திற்கு புறம்பாக, அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது. இது குறித்து, போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் கேட்டபோது, 'தவறு சீர் செய்யப்படும்' என பதில் அளித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு, அந்த இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான புதிய யுக்திகளை அரசு கடைப்பிடிப்பது, அரசாணைக்கு எதிரான செயல்.

இது, அரசாங்கத்திற்கு, ஆட்சியாளர்களுக்கு தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுபோன்ற கட்டண வசூல் மிகவும் கண்டிக்கத்தக்கது.எனவே, முதல்வர் உடனடியாக தலையிட்டு, மகளிருக்கான இலவச பயணத்தால் ஏற்படும் இழப்பு, ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-ஆக-202121:49:18 IST Report Abuse
தமிழவேல் இதுல வேடிக்கை என்னன்னா, இங்கே கமெண்ட் போட்டுள்ளவங்க எல்லாம் பஸ்ஸுல போறவங்கதானான்னு தெரியல. ஆனால், 5 க்கு பதில் 10 வாங்கினால் தப்புதான்.
Rate this:
Cancel
P.K.SELVARAJ - Chennai,இந்தியா
03-ஆக-202114:47:39 IST Report Abuse
P.K.SELVARAJ 6 வருடமாக ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் DA ஏற்றாமல் இன்சூரன்ஸ் செய்து கொடுக்காமல் ஏமாற்றிய நீங்கள் பேச முடிகிறதா? போக்குவரத்து கழகங்களில் முறை கேட்டின் உச்சம் உங்கள் ஆட்சியில். கூடுதல் கட்டணம் என்றால் consumer court இருக்கிறது. எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் டீலக்ஸ் பஸ்களில் கட்டணம் கூடுதல் தான் உங்கள் ஆட்சியிலும். உங்களுக்கு மனசாட்சி இருந்தால் பதில் கூறுங்கள்.
Rate this:
Cancel
sankar - ghala,ஓமன்
03-ஆக-202112:53:41 IST Report Abuse
sankar எங்க அம்மாவுக்கு இலவசம் பயணம் சீட்டு குடுத்து விட்டு ,எங்க அப்பன் கிட்ட அந்த தொகையை வசூலிக்கிறது இந்த அரசு , எங்க அம்மா ஹாபி ,அப்பன் பர்ஸ் காலி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X